ஹோமாகம முன்னாள் நீதவானுக்கு பிணை / உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு / பலபிட்டியவில் 11 மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின

 

ஹோமாகம முன்னாள் நீதவானுக்கு பிணை-
ஹோமாகம முன்னாள் நீதவான் சுனில் அபேசிங்க கொழும்பு பிரதான நீதவானால் சற்று முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தலா ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு பிணைகளிலேயே அவர் விடுதலைச்செய்யப்பட்டுள்ளார்.
அவரது பிணைக்கு உத்தரவாதமளித்து உறவினர்கள் இருவர் கையொப்பமிடவேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சுமார் 3 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக பெற்றுக்கொள்வதற்கு முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டிலேயே, அவர் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகளினால் அண்மையில் கைது செய்யப்பட்டடார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்வு-
சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையில் சிக்குண்ட மீனவர்கள் 40 பேரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பேச்சாளர் சரத் லால் குமார தெரிவித்தார்.
மேலும் 31 பேர் வரையில் காணாமற்போயுள்ளதாகவும் இவர்களை தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
காலநிலை மாற்றத்தின் காரணமாக 29 பேர் காணமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
பலபிட்டியவில் 11 மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கின-
பலபிட்டிய பிரதேசத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களில் 11பேரின் சடலங்கள் இன்று காலை குறித்த பிரதேசத்தில் கரையொதுங்கியுள்ளன.
கடந்த சில தினங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் காணாமல் போயிருந்தனர். இந்நிலையில், 31 மீனவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று அறிவித்தது.
அத்துடன், மேலும் 29 மீனவர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் 31 பேரை தொடர்ந்தும் தேடி வருவதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டிருந்தது.
இவ்வாறு உயிரிழந்த மீனவர்களில் பெரும்பாலானவர்கள் பலப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
ஏற்கனவே, அப்பிரதேசத்தைச் சேர்ந்த 16பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை மேலும் 11பேரின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளன.
இதேவேளை, மேலும் சில மீனவர்களின் சடலங்கள் கடலில் மிதந்துகொண்டிருப்பதாகவும் அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பலபிட்டிய பிரதேச மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger