லிபிய தாக்குதல் 28 பேர் பலி / பாகிஸ்தான் சிறைகளில் 1100 பெண்கள் அவலம் / பிலிப்பைன்சில் மலைப்பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 12 பேர் பலி

 

லிபிய பென்காசி தலைமையகம் மீது தாக்குதல் 28 பேர் பலி-
லிபியாவின் அதிபராக இருந்த முவம்மர் கடாபி, கடந்த 2011ம் ஆண்டு புரட்சிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த புரட்சிப் படையினரின் தலைநகர் லிபியா தலைநகர் பென்காசி பகுதியில் உள்ளது. இந்த தலைமையகத்தை ஆயுதமேந்திய ஒரு கும்பல் சுற்றிவளைத்தது.
தற்போதைய லிபியா அரசின் ஆயுத ஒடுக்குமுறை நடவடிக்கையில் கைக்கூலிகளாக இந்த புரட்சிப்படையினர் நடந்துக் கொள்வதால் தலைமையகத்தின் மீது அவர்கள் கண்மூடித் தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினார்கள்.
இந்த தாக்குதலில் 28 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 60க்கும் மேற்பட்டோர் அல்-ஜலாலா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த தாக்குதலையடுத்து லிபியா ராணுவத்தினர் அந்த தலைமையகத்தை கைப்பற்றி பாதுகாத்து வருகின்றனர். இங்கு ஏராளமான பேராயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாகிஸ்தான் சிறைகளில் 1100 பெண்கள் அவலம்-
பாகிஸ்தானில் உள்ள பல்வேறு சிறைகளில் சுமார் 75 ஆயிரம் கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 35 பேர் உள்பட ஆயிரத்து 1100 பெண்களும் உள்ளனர்.
இவர்கள் சிறையினுள் மிக மோசமான நிலையில் உள்ளதாக பாகிஸ்தான் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது.
இதேபோல், லாக் அப்பில் வைத்திருக்கும் பெண்களுக்கும் உரிய வசதிகள் செய்து தரப்படவில்லை எனவும் அந்த அமைப்பு குறை கூறியுள்ளது.
இங்குள்ள குளியலறை சுவர் 4 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது. வழிப்போக்கர்கள் பார்க்கும் வகையில் இந்த சுவர் மிகவும் குட்டையாக உள்ளது. மேலும், 18 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு தனியாக சிறார் காப்பகம் ஏதும் அமைத்துத் தரப்படவில்லை.
2012ம் ஆண்டில் மட்டும் 41 பெண்கள் மீது ஆசிட் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக சந்தேகப்பட்டு 15 பெண்களின் கைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. 37 பெண்கள் தலைமழிக்கப்பட்டும், 49 பெண்கள் தீயிட்டு எரிக்கப்பட்டும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர் என மனித உரிமை அமைப்பின் ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
028பிலிப்பைன்சில் மலைப்பள்ளத்தாக்கில் பஸ் விழுந்து 12 பேர் பலி-
பிலிப்பைன்சின் வடக்கு பகுதி மலைகள் நிறைந்த லா ட்ரினிடாட் பகுதியில் அரசியல் கூட்டத்திற்கு சென்று விட்டு மக்கள் பேருந்தில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து 262 அடி பள்ளத்தாக்கிற்குள் விழுந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்தவர்களில் 10 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் இருவர் மருத்துவமனைக்கு எடுத்து செல்லும் வழியில் இறந்தனர். படுகாயமடைந்த 9 பேருக்கு சிகிச்சை அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger