புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றப்பட்ட 3,956பேர் அவதி! தொடரும் அவலம்…??



புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டவர்களில் 3,956 பேர் வீடுகள் இன்றி தற்காலிக கொட்டகைகளில் வசித்து வருகின்றனர்.
மீள்குடியேற்றம் செய்யப்பட்டு பல வருடங்கள் ஆகியும் இதுவரை தங்களுக்கு எவ்விதமான நிரந்தர வீட்டு வசதிகள் செய்து தரப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திடம் கேட்டபோது, ’2013 மார்ச் மாதம் வரையான காலப் பகுதியில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 11,500 குடும்பங்களைச் சேர்ந்த 36,811 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 3,402 பேருக்கு நிரந்தர வீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும்’ தெரிவித்தது.
‘இதில் 2,691 பேருக்கு இந்திய வீட்டுத்திட்டத்தின் ஊடாகவும் 671 பேருக்கு நேர்ப் திட்டத்தின் ஊடாகவும் மேலும் 40 பேருக்கு என்.ஆர்.சி திட்டத்தின் ஊடாகவும் நிரந்தர வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன’ என்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகம் குறிப்பிட்டது.
‘தற்போது 19 கிராம அலுவலர் பிரிவுகளில் 4,602 குடும்பங்களுக்கு தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அரை நிரந்தர வீடுகளை நிர்மாணிக்ககும் பணிகள் நடைபெற்று வருவதாகவும்’ பிரதேச செயலகம் சுட்டிக்காட்டியது.
அத்துடன், ‘புதுக்குடியிருப்பில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட 3,956 பேர் இன்னமும் தற்காலிக கொட்டகைகளில் வாழ்ந்து வருவதாகவும் இவர்களுக்கு வீடுகள் வழங்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகவும்’ பிரதேச செயலகம் மேலும் குறிப்பிட்டது.
jvp_kajanjvp_kajan2
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger