ஜப்பான் ரெயில் பாதையில் 2-ம் உலகப்போர் குண்டு: 1 லட்சம் பயணிகள் தவிப்பு



ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மிகவும் பரபரப்பாக இயங்கப்பட்டு வரும் ரெயில் பாதை அருகே கட்டுமானப்பணிககாக குழி தோண்டும் பணி நடைபெற்றது. அப்போது 40 செ.மீட்டர் நீளமுடைய ஒரு வெடிக்காத குண்டு ஒன்று கிடப்பதை அவர்கள் கண்டுபிடித்தனர்.

உடனே வெடிகுண்டு அகற்றும் நிபுணர்கள் குழு அங்கு வரவழைக்கப்பட்டு, குண்டு கிடந்த இடத்தை சுற்றி மக்களோ அல்லது எந்தவித நடவடிக்கைகளும் செயல்படாதவாறு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தினர். பின்னர் மணல் மூட்டைகளை அடுக்கி அந்த குண்டை செயல் இழக்கச்செய்தனர். இதனால் 150 ரெயில்கள் இயங்கும் பரபரப்பான அந்த பாதையில் ரெயில்கள் ஏதும் இயங்காமல் நிறுத்திவைக்கப்பட்டது. இதனால் சுமார் 1 லட்சம் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த குண்டு இரண்டாம் உலகப்போரின் போது அமெரிக்காவிற்கு எதிராக ஜப்பான் இம்பீரியல் ராணுவத்தினரால் வீசப்பட்டு வெடிக்காமல் போனதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger