மாணவியை கர்ப்பிணியாக்கிய மச்சான் தலைமறைவு / கைதிகள் போன்று மாணவர்கள் நடாத்தப்படுகின்றனர் -ஜே.வி.பி / ஆயுர்வேத வைத்தியர்கள் 180 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை

 

மாணவியை கர்ப்பிணியாக்கிய மச்சான் தலைமறைவு-
15 வயது மாணவியான சிறுமியை கடத்திச் சென்று வல்லுறவுக்குட்படுத்தி கர்ப்பிணியாக்கிய குறித்த சிறுமியின் மச்சானை பொலிஸார் தேடி வலைவிரித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவின் கணவரையே தேடிவருவதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் குறித்த சிறுமியை வீட்டுக்கு தெரியாமல் கடந்த 28 ஆம் திகதி ஹட்டனுக்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு தனது நண்பரின் வீட்டில் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரை தங்க வைத்தே இந்த குற்றத்தை புரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன் பின்னர் குறித்த சிறுமியை அழைத்துவந்த சந்தேகநபர் அவரை வீட்டில் விட்டுவிட்டு தலைமறைவாகியுள்ளார்.
வீட்டுக்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்ததையடுத்து இதுதொடர்பில் கற்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதுடன் சிறுமியும் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.
குறித்த சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப் பட்டுள்ளதாகவும் அவர் கர்ப்பமடைந்துள்ளதாகவும் வைத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே தலைமறைவாகியுள்ள சந்தேநபரான சிறுமியின் அக்காவின் கணவரை தேடி வலைவிரித்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கைதிகள் போன்று மாணவர்கள் நடாத்தப்படுகின்றனர் -ஜே.வி.பி-
உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அடியாட்களைப் போன்று செயற்படுவதாக குற்றம் சுமத்தியுள்ள ஜே.வி.பி கட்சி, சிறைக் கைதிகளை, சிறைச்சாலை அதிகாரிகள் நடாத்துவதனைப் போன்றே எஸ்.பி. திஸாநாயக்க, பல்கலைக்கழக மாணவர்களை நடாத்தி வருவதாக தெரிவித்துள்ளது.
பல்கலைக் கழகங்களை தனியார் மயப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டு வருவதாக ஜே.வி.பி உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
சபரகமுவ பல்ககை;கழகம் ஓர் சித்திரவதைக் கூடமாக உருமாறியுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அரசியல் நோக்கமுடைய காவல்துறையினரை ஈடுபடுத்தி மாணவர்கள் தாக்கப்படுவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 1000 பல்கலைக்கழக மாணவர்கள் இடைநிறுத்தப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஆயுர்வேத வைத்தியர்கள் 180 பேரை சேவையில் இணைக்க நடவடிக்கை-
பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்கள் 180 பேரை சேவையில் இணைத்துக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவர்கள் நாடளாவிய ரீதியில் உள்ள ஆயுர்வேத வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் பாலித்த வீரகோன் தெரிவித்துள்ளார்.
சுதேச மருத்துவ அமைச்சின் பரிந்துரைக்கு அமைய ஆயுர்வேத வைத்தியர்களை சேவையில் இணைத்துக் கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger