சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக செயல்படும் லெபனன் ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் சன்னி போராளிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இதனால் லெபனில் உள்ள சன்னி-ஷியா பிரிவினரிடையே மோதல்கள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், கடந்த ஞாயிறன்று சிடோன் சோதனைச்சாவடி ஒன்றில் ஆயுதம் ஏந்திய சன்னி குழுக்கள் தாக்குதல் நடத்தின. இதனையடுத்து லெபனன் ராணுவத்தினருக்கும் சன்னி போராளிகளுக்கும் இடையே இரவு முழுவதும் கடுமையான சண்டை நடந்தது.
துப்பாக்கிகள் மற்றும் ராக்கெட்டுகள் வீசி நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் குறைந்தது 16 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். சன்னி பிரிவினரின் முக்கியஸ்தரை சோதனைச்சாவடியில் கைது செய்ததை அடுத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்துபோயுள்ளனர். லெபனனில் ஏற்பட்டுள்ள பாதுகாப்பு பிரச்சினை காரணமாக பாராளுமன்றத்திற்கு நடக்க இருந்த தேர்தல் ஒத்திப்போடப்பட்டுள்ளது.
Post a Comment