பாகிஸ்தானில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசு, முன்னாள் ராணுவ ஆட்சியாளரான பர்வேஸ் முஷாரப்பை நாட்டுக்கு துரோகம் இழைத்ததாக வழக்கில் சிக்க வைக்க திட்டமிட்டுள்ளது. நீதிமன்றத்திற்கு முன்பு தனது குற்றத்திற்காக பர்வேஸ் முஷாரப் பதிலளிக்க வேண்டும் என்று நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பெனாசிர் கொலை வழக்கில் இருந்து தப்பிப்பதற்காக பாகிஸ்தானில் இருந்து வெளிநாட்டுக்கு தப்பியோடிய முஷாரப் இந்த ஆண்டு தொடக்கத்தில் பாகிஸ்தான் வந்தார். 1999-ம் ஆண்டு நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்து ராணுவ ஆட்சி ஏற்படுத்தியது உள்ளிட்ட வழக்குகளில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் அவர் கைது செய்யப்பட்டு தற்போது வீட்டுக் காவலில் இருந்து வருகிறார்.
நாட்டுக்கு துரோகம் இழைத்த வழக்கில் பாகிஸ்தானில் ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது ஆயுள் தண்டனையோ கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதற்கு முஷாரப் அரசியல் காரணங்களுக்காக நான் பழிவாங்கப்படுகிறேன் என்று கூறியுள்ளார்.
Post a Comment