அமெரிக்க கடலில் 1300 பவுண்ட் எடையுள்ள ராட்சத சுறா பிடிப்பட்டது / துபாய் பத்திரிகை அலுவலகத்தில் 30 ஆயிரம் தினார் மோசடி: இந்தியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

 

அமெரிக்க கடலில் 1300 பவுண்ட் எடையுள்ள ராட்சத சுறா பிடிப்பட்டது-
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை சேர்ந்த ஜேசன் ஜான்ஸ்டன் மற்றும் அவரது குழுவினர், ஹங்டிங்டன் கடலுக்குள் கரையில் இருந்து சுமார் 15 மைல் தூரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அவர்களின் வலையில் மிக கனமான ஓர் மீன் சிக்கியதை உணர்ந்தனர். வலைக்குள் சிக்கிய மீனை சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு கரைக்கு இழுத்து வந்துப் போட்ட அவர்கள் திகைத்துப் போயினர்.
சுமார் 12 அடி நீளமுள்ள ராட்சத சுறா மீன் அந்த வலையில் சிக்கியிருந்தது.
கடற்கரையில் இருந்த எடைபோடும் இயந்திரத்தில் எடையிட்டு பார்த்தபோது 1300 பவுண்டுகளுக்கும் (சுமார் 600 கிலோ) அதிகமாக இருந்தது.
அப்பகுதியில் இதுவரை பிடிபட்ட சுறா மீன்களில் இதுதான் அதிக எடை கொண்டது என கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே பகுதியில் உள்ள மெரினா டெல் ரே கடலில் 800 பவுண்ட் எடையுள்ள சுறா மீன் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.
துபாய் பத்திரிகை அலுவலகத்தில் 30 ஆயிரம் தினார் மோசடி: இந்தியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை-
துபாயில் உள்ள தினசரி பத்திரிகை அலுவலகத்தில் 30 ஆயிரம் தினார் மோசடி செய்ததாக இந்தியர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அந்த நிறுவனத்தில் இருந்து முறையாக பணம் பெற வேண்டிய நபர்களின் பெயர்களை நீக்கிவிட்டு, தனது பெயரையும், வங்கி கணக்கு எண்ணையும் எழுதி இந்த மோசடியில் அவர் ஈடுபட்டதாக பத்திரிகை நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் நேற்றுமுன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆவணங்களில் மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.
தண்டனை வழங்கப்பட்ட நபர் இந்தியாவின் எந்த மாநிலத்தை சேர்ந்தவர்? அவரது பெயர் என்ன? என்பது பற்றிய விபரங்களை வெளியிடாத போலீசார், தண்டனை காலம் முடிந்தபிறகு அவர் உடனடியாக நாடு கடத்தப்படுவார் என்று தெரிவித்தனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger