மாணவர்களில் 10 வீதமானவர்கள் அதிக உடற் பருமனால் பாதிப்பு / விண்ணப்பங்கள் கோரல் / பல்கலைக் கழகங்களில் மேலும் 6,445 மாணவர்களை இணைக்க நடவடிக்கை

 

மாணவர்களில் 10 வீதமானவர்கள் அதிக உடற் பருமனால் பாதிப்பு-
இந்த மாதம் தேசிய போஷாக்கு மாதம் என பெயரிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்து. இதன்படி நாட்டு முழுவதிலும் போஷாக்கு வேலைத்திட்டங்களை முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தியுள்ளார் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குறைந்த எடையுடன் பிறக்கும் பிள்ளைகள் மற்றும் அதிக எடையுடன் பிறக்கும் குழந்தைகள் தொடர்பில் இந்த ஆண்டு மீண்டும் பதிவாகியுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி குறைந்த எடையுடன் 16.6 வீதமான பிள்ளைகளும் கூடிய எடையுடன் 17.3 வீதமான பிள்ளைகளும் பிறக்கின்றன.
நகர பிரதேச பாடசாலை மாணவர்களில் 10 வீதமானவர்கள் அதிக உடற்பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக போசாக்கு தொர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பல்கலைக் கழகங்களில் மேலும் 6,445 மாணவர்களை இணைக்க நடவடிக்கை-

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்து இணைந்துகொள்ளாத மாணவர்களுக்குப் பதிலாக மேலும் 6,455 மாணவர்களை இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்று கட்டங்களின் கீழ் இந்தக் குழுவினர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கேஷனிக்கா ஹிரிம்புரேகம குறிப்பிட்டுள்ளார்.
இவர்களை இணைத்துக் கொண்ட பின்னர் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.
2012ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை பல்கலைக்கழகங்களில் இணைத்துக் கொள்வதற்கான கையேடு எதிர்வரும் இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் பல்கலைக்கழகங்களில் இணைத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கேஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் கோரல்-
வடக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆங்கிலம், தகவல் தொழில்நுட்பட்பம் மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன்பொருட்டு, ஆசிரியர் சேவையின் வகுப்பு மூன்றாம் தரம் இரண்டு பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பஙகள் கோரப்பட்டுள்ளன.
விண்ணப்பதாரிகள் ஆசிரியர் சேவைக்கு 18 வயதுக்கும், 40 வயதிற்கும் இடைப்பட்ட இலங்கை கற்கைநெரியாளர்கள் விண்ணப்பிக்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
2013ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் சேவையின் திறந்த போட்டிப் பரீட்சைக்கு விண்ணப்பிப்போர் வடமாகாணத்தைச் சேர்ந்தவர்களாக இருத்தல் வேண்டும்.
குறித்த பதவிக்கான வெற்றிடங்கள் யாழ்ப்பாணத்தில் வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, வடமராட்சி கிழக்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் காணப்படுகின்றன.
அத்துடன் வடமாகாணத்தில் நானாட்டன், முசலி, மடு, மாந்தை மேற்கு, வவுனியா தெற்கு, செட்டிகுளம், நெடுங்கேணி, ஓமந்தை, மாந்தை கிழக்கு, துணுக்காய், ஒட்டிசுட்டான், கரைதுபைபற்று, புதுக்குடியிருப்பு, வெலி ஓயா, கண்டாவளை, கரைச்சி, பூநகரி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்தும் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
மேலதிக கல்வித் தகைமைகள், ஆட்சேர்ப்பு முறை, விண்ணப்பிக்கும் முறை, பரீட்சைக் கட்டணம் ஆகிய விபரங்களை, இலக்கம் 481, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள வடமாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலகத்தில் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger