அபுதாபி: மாணவனை தகுதி நீக்கம் செய்த பள்ளிக்கு 10 ஆயிரம் திர்ஹம் அபராதம் / மீண்டும் சீனா மீது ‘ஹெக்கிங்’ குற்றச்சாட்டு: அமெரிக்க போர் விமான மாதிரி வடிவங்கள் இணையத்தில் திருட்டு

 

அபுதாபி: மாணவனை தகுதி நீக்கம் செய்த பள்ளிக்கு 10 ஆயிரம் திர்ஹம் அபராதம்-
எகிப்தில் படித்து வந்த தனது மகனை அபுதாபியில் உள்ள பள்ளிக்கூடத்தில் அவனது தந்தை 12ம் வகுப்பில் சேர்த்தார்.
அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், எகிப்தின் கல்வி முறை அபுதாபி கல்வி முறைக்கு இணையானது அல்ல என கூறிய பள்ளி நிர்வாகம் அந்த மாணவனை தகுதி நீக்கம் செய்து 11ம் வகுப்பில் அனுமதித்தது.
11ம் வகுப்பில் ஓராண்டு படித்த பின்னர் 12ம் வகுப்பிலும் தேர்ச்சி பெற்று அந்த மாணவன் பள்ளியில் இருந்து தகுதிச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டு வெளியேறினான்.
இதனையடுத்து, பள்ளி நிர்வாகத்தின் மீது மாணவனின் தந்தை அபுதாபி கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
முதன்முதலில் 6 மாத காலம் 12ம் வகுப்பில் எனது மகன் அபுதாபியில் படித்தபோது அவனது டியூஷன் செலவுக்கு 30 ஆயிரம் திர்ஹம் செலவானது. மீண்டும் 11ம் வகுப்பிற்கு அவனை தகுதி நீக்கம் செய்த போது 20 ஆயிரம் திர்ஹம் டியூஷனுக்காக செலவழித்துள்ளேன்.
மேலும், இந்த தகுதி நீக்கத்தால் எனது மகனும், மனைவியும் கடுமையான மனஉளைச்சலுக்கு ஆளாக நேர்ந்தது. இதற்கு தக்க இழப்பீடு பெற்றுத்தர வேண்டும் என அவர் வாதாடினார்.
மாணவனை முதன்முதலாக 12ம் வகுப்பில் அனுமதிப்பதற்கு முன்னரே பள்ளியின் சட்டதிட்டங்களைப் பற்றி தெளிவாக கூறாமல், 12ம் வகுப்பின் இடைக்காலத்தில் அவனை 11ம் வகுப்பிற்கு மாற்றிய பள்ளி நிர்வாகத்திற்கு 10 ஆயிரம் திர்ஹம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
மீண்டும் சீனா மீது ‘ஹெக்கிங்’ குற்றச்சாட்டு: அமெரிக்க போர் விமான மாதிரி வடிவங்கள் இணையத்தில் திருட்டு-
அமெரிக்காவின் இராணுவ ரகசியங்களை உள்ளடக்கிய இணையத்தளத்தில் இருந்த 20கும் அதிகமான போர் விமான மாதிரி வடிவங்களை சீன கணனிப் பொறியியலாளர்கள் இணையத்தில் திருடியுள்ளதாக அமெரிக்க ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இராணுவ ரகசியங்கள் உள்ளடங்கிருந்ததமையினால் பலத்த பாதுகாப்பாக குறித்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டிருந்துள்ளது. இருப்பினும் சீன கணனிப் பொறியியலாளர்கள் குறித்த இணையத்தளத்தை ஹெக் செய்து அதிலிருந்து 20 மேற்பட்ட அமெரிக்க போர் விமான மாதிரி வடிவங்களை திருடியுள்ளனர் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்க விமானங்களில் பயன்படுத்தப்படும் அதிநவீன யுக்திகளை தெரிந்து கொண்டு அவற்றை செயலிழக்கச் செய்யும் ஆய்விலும் சீனா ஈடுபடக் கூடும் என கூறப்படுகின்றது.
இதேவேளை அவுஸ்திரேலியாவின் உளவுப்படை அலுவலம் மற்றும் உளவுப்படை அதிகாரிகள் குடியிருப்பு போன்றவற்றின் மாதிரியையும் சீனா திருடியுள்ளதாகவும் உளவுத் துறையின் இணையத்தளமும் சீனாவினால் ‘ஹெக்கிங்’ செய்யப்பட்டுள்தாகவும் ஆவுஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பொப் கோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக சீனா மீது பல்வேறு ஹெக்கிங் குற்றச்சாட்டுக்களை அமெரிக்க கூறிவருகின்றது. ஆனால் சீனா அவற்றை முழுவதுவமாக நிராகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger