பாஸ்டன் குண்டுவெடிப்பு: இரண்டாவது நபரை சுட்டுக் கொன்றது FBI! / லண்டனில் கொலை செய்யப்பட்ட சிப்பாயின் பெயர் அறிவிப்பு / சுவீடனில் போலீசாருக்கு எதிராக 3ஆவது நாளாகத் தொடரும் கலவரம்! /

 

usa.Ibragim-Todashevபாஸ்டன் குண்டுவெடிப்பு: இரண்டாவது நபரை சுட்டுக் கொன்றது FBI!-
அமெரிக்க புலனாய்வுத் துறையான FBI சமீபத்தில் நிகழ்ந்த பாஸ்டன் குண்டுவெடிப்புடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேக நபரை இன்று (புதன்கிழமை) சுட்டுக் கொன்றுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புளோரிடாவிலுள்ள ஒர்லாண்டோவில் இன்று காலை குறித்த நபரிடம் FBI விசாரணை… மேற்கொண்டு இருந்த போது அவர் திடீரென தாக்குதலில் ஈடுபட்டதாகவும் அதனால் சுட நேர்ந்ததாகவும் FBI இச்சம்பவம் குறித்துத் தெரிவித்துள்ளது. இதனை FBI விசேட ஏஜன்ட் டேவ் கௌவெர்டியெர் உறுதிப்படுத்தினார் உண்மையில் என்ன நடந்தது என்ற மேலதிக விபரங்களைக் கூற மறுத்துவிட்டார்.
எனினும் பல ஊடகங்களில் வெளியான தகவலின் படி கொல்லப்பட்டவர் இப்ராகிம் ரொடாசேவ் (Ibragim Todashev) என அடையாளம் காணப்பட்டதுடன் செவ்வாய் இரவு வரை இவர் விசாரணைக்கு ஒத்துழைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
தற்போது இச்சம்பவம் குறித்து மேலதிக விபரங்களை அறிவதற்கு FBI இன் விசேட குழு 24 மணித்தியாலங்களுக்குள் குறித்த இடத்துக்குச் செல்லவுள்ளது.
பொஸ்டொன் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஏற்கனவே இரு சகோதரர்கள் அடையாளம் காணப்பட்டதுடன் அவர்களில் ஒருவர் கைது நடவடிக்கையின் போது சுட்டுக் கொல்லப் பட்டும் மற்றையவர் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லண்டனில் கொலை செய்யப்பட்ட சிப்பாயின் பெயர் அறிவிப்பு-
லண்டனில் இருவரால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டவர் பிரிட்டிஷ் படையின் ஃபுசிலியர்ஸ் றோயல் றெஜிமெண்டின் இரண்டாவது பட்டாலியனைச் சேர்ந்த லீ ரிக்பி என்று பிரிட்டிஷ் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.
22 வயதான இவர் ஆப்கானிஸ்தானில் பணியாற்றியுள்ளார். பிரிட்டிஷ் இராணுவத்தைச் சேர்ந்த இவர் மிகக் கொடூரமான முறையில் நேற்று மாலை கொல்லப்பட்டார்.
இச்சம்பவத்தை அடுத்து டேவிட் கேமரன் அவர்கள் தனது பிரெஞ்சு பயணத்தை அவசரமாக முடித்துக் கொண்டு நாடு திரும்பினார். இந்தத் தாக்குதல் சம்பவத்தை ஒரு தீவிரவாதத் தாக்குதலாகக் கருதி அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டனில் நேற்று நடைபெற்ற தாக்குதல் தொடர்பில் தெற்கு லண்டனில் இருக்கும் ஒரு வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். நான்கு பேர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். நாட்டின் கிழக்கே இருக்கும் லின்கன்சியார் நகருக்கு அருகே இருக்கும் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
இஸ்லாமிய கோஷங்களை எழுப்பிய இருவரால் பட்டப் பகலில் இந்த இராணுவ வீரர் இறைச்சி வெட்டும் கத்திகள் மற்றும் கூரிய இரும்பு வெட்டறுவாள் ஆகியவற்றால் தாக்கப்பட்டார்.
தாக்குதலை நடத்திய பிறகு, அந்த இருவரும் தப்பியோட முயற்சிக்கவில்லை. காவல்துறையினர் வந்த போது அவர்களை நோக்கியும் இந்த இருவரும் ஓடியுள்ளனர். பின்னர் அந்த இருவரும் சுடப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்தக் கொலை காட்டுமிராண்டித்தனமானது என்று கூறி முஸ்லிம் அமைப்புகளும் கண்டித்துள்ளன.
லண்டனில் நடைபெற்ற தாக்குதலுக்கு இஸ்லாமின் மீது பழி போடுவது தவறு என்று லண்டன் மேயர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார். அதே போல இத்தாக்குதலுடன் பிரிட்டனின் வெளியுறவுக் கொள்கையைத் தொடர்பு படுத்துவதும் தவறு என்று அவர் கூறியுள்ளார்.
சுவீடனில் போலீசாருக்கு எதிராக 3ஆவது நாளாகத் தொடரும் கலவரம்!
சுவீடனின் தலைநகர் (Stockholm) ஸ்டொக்ஹொல்ம்ற்கு மேற்கே உள்ள ஹுஸ்பி எனப்படும் குடியிருப்பில், சுமார் 11’000 வெளிநாட்டைச் சேர்ந்த முதல் மற்றும் இரண்டாவது தலைமுறை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இங்கு உள்ள கட்டடம் ஒன்றினுள் தன்னை ஒரு பெண்ணுடன்… உள்ளே பூட்டிக் கொண்ட (69)முதியவரைமீட்கும் போது கத்தியால் அவர் போலிசாரைத் தாக்க முனைந்ததால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இம் முதியவரின் மரணத்தைத் தடுத்திருக்கலாம் எனவும் இச்சம்பவம் போலிசாரின் அராஜகத்தையே குறிக்கிறது எனவும் கொதிப்படைந்த சுவீடன் மக்கள் ஞாயிறு இரவு முதல் தொடர்ந்து மூன்று நாளாகப் பெரும் கலவரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் ஹுஸ்பியில் ஒன்று கூடிய 200 பொதுமக்கள் கற்களை போலிசார் மீது வீசியும் வீதியில் நின்ற கார் வண்டிகளை எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல வீடுகளின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டதுடன் 10 கார்களும் பல கன்டெயினர்களும் கொளுத்தப்பட்டன.
போலிசாருடன் நிகழ்ந்த மோதலில் 7 போலிசார்கள் காயமடைந்தனர். இக் கலவரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு அவர்களில் இருவர் விசாரணைக்குப் பின் விடுவிக்கப்பட்டதாக போலிஸ் சார்பான பேச்சாளர் ஜோர்கென் கார்ல்ஸ்ஸொன் தெரிவித்தார்.
மேலும் ஃபிட்ஜா (Fittja) எனும் இன்னொரு நகரிலும் கலவரம் வெடித்ததுடன் பொதுச் சொத்துக்கள் நாசமாக்கப்பட்டதாகவும் இக் கலவரத்துக்கும் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்கலாம் எனவும் போலிஸ் தெரிவித்துள்ளது.
கொல்லப்பட்ட முதியவரின் தாய்நாடு எதுவெனத் தெரிவிக்க போலிசார் மறுத்து விட்டனர். இதேவேளை கலவரத்தை அடக்கும் போதும் போலிசார் லத்தியால் பெண்களை அடித்துத் துன்புறுத்தியதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger