பெற்றோர்களாலேயே பிள்ளைகளுக்கு பாதிப்பு- அனோமா / குறைந்த செலவினத்தில் மின்சார உற்பத்திக்கு நோர்வே ஆதரவு / புதிய அரசியல் அமைப்பு வகுக்கப்பட வேண்டும் – வாசு


 

பெற்றோர்களாலேயே பிள்ளைகளுக்கு பாதிப்பு- அனோமா திஸாநாயக்க-
ஒருசில பெற்றோர்களாலேயே அவர்களின் பிள்ளைகள் பாதிப்புக்கு உள்ளாதல் மற்றும் கொடூர நிலைமைக்கு ஆளாகின்ற சந்தர்ப்பங்கள் கடந்த சில தினங்களாக பதிவாகி வருகின்றன. குறிப்பாக, பிள்ளைகளின் அங்கங்கள் மீது சுடு வைத்தல், பிள்ளைகளைக் கொலை செய்தல், பிள்ளைகளுடன் தற்கொலை செய்துகொள்ளல் ஆகிய சம்பவங்கள் அவற்றுள் குறிப்பிடத்தக்க சம்பவங்களாகும்.
இத்தகைய சம்பவங்களின் வரிசையில் ஹட்டன் லிந்துலை பகுதியில் நேற்று மற்றுமொரு சம்பவம் பதிவாகியுள்ளது. தாய் மற்றும் தந்தை ஆகியோரிடையே ஏற்பட்ட தகராறின் போது ஐந்து மாதங்கள் நிரம்பிய சிசுவொன்று உயிரிழந்துள்ளது.
தகராறின் போது, கணவனால் தள்ளிவிட்ட மனைவி, சிசுவின் மீது விழுந்ததை அடுத்தே இந்தப் பரிதாப சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை, வயது வந்தவர்களின் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக பிள்ளைகள் எந்த விதத்திலும் பாதிக்கப்படுவதை அனுமதிக்க முடியாதென தேசிய சிறுவர் அதிகாரசபைத் தலைவரும், சட்டத்தரணியுமான அனோமா திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
நாட்டில் சிறந்த சுகாதார சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் தமது பிள்ளைகளை பொறுப்புடன் வளர்ப்பதற்கான பொறுப்புக்களை பெற்றோர் சரிவர நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
குறைந்த செலவினத்தில் மின்சார உற்பத்திக்கு நோர்வே ஆதரவு-
இலங்கையில் குறைந்த செலவினத்தில் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வேலைத்திட்டத்திற்கு நோர்வே ராஜ்ஜியம் ஆதரவளிக்க முன்வந்துள்ளது. இது தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் கிரேட் லோஷன் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்றது.
இதன்போது, இலங்கை எதிர்கொண்டுள்ளன சக்திவலு நெருக்கடி தொடர்பில் அமைச்சர் விளக்கமளித்திருந்தார்.
சக்திவலு நெருக்கடியை தீர்ப்பதற்கு குறைந்த செலவில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளும் வகையில் சூரிய சக்தியை பயன்படுத்த நோர்வே பரிந்துரைத்துள்ளது.
அதுகுறித்து, ஆராயுமாறு அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அதிகாரிகளுக்கு பணித்துள்ளார். இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு நோர்வே ஆதரவளிக்கவுள்ளதாக நோர்வே தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு வகுக்கப்பட வேண்டும் – வாசு-
தேசத்தின் ஐக்கியத்தை நோக்கமாக கொண்ட புதிய அரசியல் அமைப்பு வகுக்கப்பட வேண்டுமென அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயகம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பை உருவாக்குவோம்’ என்ற தொனிப்பொருளில் சோசலிச மக்கள் முன்னணி குடியரசு தினத்தைக் கொண்டாடியது.
1972 ஆம் ஆண்டில் குடியரசு அரசியல் அமைப்பை வகுப்பதில் முன்னின்று செயற்பட்ட கலாநிதி என்.எம்.பெரேராவும் இதன்போது நினைவு கூரப்பட்டார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய லங்கா சமசமாஜக் கட்சியின் செயலாளரும் சிரேஷ்ட அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண 13 ஆவது திருத்தத்தை வலுப்படுத்தி முன்னோக்கி இட்டுச் செல்ல வேண்டும் என குறிப்பிட்டார்.
வடக்கில் தேர்தலை நடத்த வேண்டும் என சிலர் கூறிவரும் நிலையில் உறுதியளிக்கப்பட்டவாறு செப்டெம்பர் மாதம் வட மாகாண சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என சிரேஷ்ட அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
அமைச்சர் வாசுதேவ நாணயக்கார அங்கு உரையாற்றுகையில், தேசத்தில் ஐக்கியமின்றி நாட்டின் இறைமையைப் பாதுகாக்க முடியாது என சுட்டிக் காட்டினார்.
ஒற்றுமையின்மையால் இலங்கையின் ஒரு தரப்பினர் 30 வருடங்களாகப் பிரிந்து இருந்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு வலியுறுத்தல்-
நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை ஐக்கிய தேசிய கட்சியும் எட்டியிருப்பதாக சிறிலங்கா கம்மியூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டியு குணசேகர தெரிவித்துள்ளார். சோசலிச மக்கள் முன்னணியினால் கொழும்பில் நடத்தப்பட்ட குடியரசு தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய லங்கா சமசமாஜ கட்சியின் பொதுசெயலாளர் திஸ்ஸ வித்தாரண, அரசாங்கத்தினால் இணங்கப்பட்ட வகையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வடக்கில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தின நிகழ்வில் பங்கேற்றிருந்த ஜனநாயக இடதுசாரி கட்சியின் பொது செயலாளரான அமைச்சர் வாசுதேவ நாயக்கார கருத்துதெரிவிக்கையில், 18 வது அரசியலமைப்பு காரணமாக பொதுமக்களின் நலன்புரி சேவைகள் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger