இந்தியரான டாக்டர் டவிண்டர் ஜீட் பெயின்ஸ்(46) என்பவர் தென் மேற்கு இங்கிலாந்தின் வில்ட்ஷைர் அருகேயுள்ள ராயல் ஊட்டன் பாசெட் பகுதியில் கிளினிக் வைத்திருந்தார். இவரது கிளினிக்கிற்கு சிகிச்சை பெறவந்த இளம்பெண் ஒருவர் தனக்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்து விட்டதாக டாக்டர் மீது போலீசில் புகார் அளித்தார்.
டாக்டரின் கிளினிக்கை போலீசார் சோதனையிட்ட போது, வகை வகையான பெண்களின் மார்பகங்கள் மற்றும் மர்ம உறுப்புகள் ஆகியவற்றை டாக்டர் பரிசோதிப்பது போன்ற வீடியோ காட்சிகள் அவரது கம்ப்யூட்டரில் பதிவாகி இருந்தன. இவற்றை டாக்டர் பெயின்ஸ் எப்படி படமாக்கினார்? என்பதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
‘ஜேம்ஸ் பாண்ட்’ படங்களில் வருவதைப் போல், தனது விலையுயர்ந்த ஆடம்பர கைக்கடிகாரத்தில் உள்ள அதிநவீன கேமரா மூலம் பெண்களின் உடலில் டாக்டரின் கைகள் எங்கெங்கெல்லாம் படுகிறதோ அந்த காட்சிகள் அத்தனையும் கைக்கடிகாரத்தில் உள்ள கேமராவில் பதிவாகும்படி ‘செட் அப்’ செய்து வைத்திருந்தார்.
நாள் முழுவதும் பெண்களை பரிசோதித்த காட்சியை இரவு முழுவதும் கம்ப்யூட்டரில் பார்த்து ரசித்து அற்ப சந்தோஷம் அனுபவித்த அவரை கைது செய்த போலீசார் கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர்.
அவரது கம்ப்யூட்டரில் இருந்த நோயாளிகளின் விலாசத்தின்படி சுமார் 3 ஆயிரம் பெண்களை சந்தித்து போலீசார் விசாரித்த போது, டாக்டரின் சந்தேகத்திற்குரிய நடத்தையைப் பற்றி அவர்கள் வாக்குமூலம் அளித்தனர். இவற்றில் சிலவற்றை அரசு தரப்பு சாட்சியங்களாக போலீசார் கோர்ட்டில் சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கில் டாக்டர் பெயின்சுக்கு 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். ‘உங்களால் டாக்டர் தொழிலுக்கே களங்கம் ஏற்பட்டுள்ளது. உயர்வான டாக்டர் தொழிலை பயன்படுத்தி அத்தொழிலுக்குரிய கடமை உணர்வு மற்றும் நம்பகத் தன்மைக்கு மாறான வகையில் நடந்ததற்காக இந்த தண்டனையை வழங்குகிறேன்’ என நீதிபதி டக்ளஸ் ஃபீல்ட் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
தண்டனை பெற்றுள்ள டவிண்டர் ஜீட் பெயின்ஸ் 1993-ம் ஆண்டு மங்களூர் மருத்துவ பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்று, 2007-ம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மீது வழக்கு தொடரப்பட்டவுடன் இங்கிலாந்தில் டாக்டர் தொழில் செய்ய அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது.
Post a Comment