மாணவனின் மரணம்: சாரணர் பயிற்சிக்குட்படுத்திய அதிபர், ஆசிரியர்கள் கைது-
இன்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகனேரி பொத்தானை ஆற்றில் மூழ்கி மரணமான சாரண இயக்க மாணவனின் மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார், அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைதுசெய்து வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தியுள்ளனர்.

வாழைச்சேனை பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தைச் சேர்ந்த பதினைந்து மாணவ குழுவினரை அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்கள் சாரணர் பயிற்சிக்காக இன்று காலை 08.30 மணியளவில் அங்கு அழைத்துச் சென்றிருந்தனர்.
இவ்வாறு சென்ற மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையில் குறித்த மாணவன் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நீரில் மூழ்கி மரணமான மாணவனின் சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு மரணம் தொடர்பான விசாரணைகளும் இடம்பெற்றது.
வாழைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் தரம் 09இல் கல்வி கற்கும் பதுர்தீன் பாயிஸ் (வயது 14) என்றழைக்கப்படும் மாணவரே உயிர் இழந்தவராவார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட வாழைச்சேனை பொலிஸார் – அதிபர் உட்பட மூன்று ஆசிரியர்களை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்திய பின்னர் வாழைச்சேனை மாவட்ட நிதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹூஸைன் முன்னிலையில் ஆஜர்படுத்தியதற்கிணங்க இது தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ளும் பொருட்டு எதிர்வரும் 29ஆம் திகதி மீண்டும் மன்றில் ஆஜர் படுத்துமாறு பொலிஸாருக்கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
குறித்த மாணவரின் ஜனாஸா விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இன்று இரவு 08.00 மணியளவில் வாழைச்சேனை மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளி வாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
சரத் என் சில்வா மாவத்தை திறந்து வைப்பு-
திருகோணமலை சேருவில ரஜமகா விகாரை மற்றும் சோமாவதி ரஜமகா விகாரை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள புதிய மாவத்தையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை திறந்து வைக்கவுள்ளார்.
திருகோணமலை சேருவில ரஜமகா விகாரை மற்றும் சோமாவதி ரஜமகா விகாரை ஒன்றிணைத்து அமைக்கப்பட்டுள்ள புதிய மாவத்தையை பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாளை திறந்து வைக்கவுள்ளார்.
இந்த மாவத்தைக்கு முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதன் அமைப்பு பணிக்கென 400 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய இந்த மாவத்தை அமைக்கப்பட்டுள்ளது.
இசட் புள்ளி சர்ச்சைக்கு ஷிராணியே பொறுப்பு- கல்வி அமைச்சர்-
இஸட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துளளார்.
இஸட் புள்ளி சர்ச்சைகளுக்கு முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவே பொறுப்புச் சொல்ல வேண்டும் என்று கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துளளார்.
2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜி.சீ.ஈ உயர்தரப் பரீட்சை இசட் புள்ளி தொடர்பில் சர்ச்சை ஏற்பட்டிருந்தது. மாணவர்களுக்கு நியாயமான முறையில் தீர்வுகளை வழங்க அரசு திட்டமிட்டிருந்தது.
எனினும், அப்போதைய பிரதம நீதியரசர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க சந்தர்ப்பம் அளிக்கவில்லை.
அதன் காரணமாகவே இசட் புள்ளி தொடர்பில் மாணவர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கினர் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment