லண்டனில் பாகிஸ்தான் விமானம் பிரிட்டிஷ் ராணுவ விமானங்களால் சிறைபிடிப்பு / வீட்டை சுமந்து கொண்டு 435 கிலோ மீற்றர் தூரம் நடந்த நபர் / பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பெரும் தீ விபத்து


வீட்டை சுமந்து கொண்டு 435 கிலோ மீற்றர் தூரம் நடந்த நபர்-
சீனாவைச் சேர்ந்த ஒருவர் தான் வசிக்கும் வீட்டை தோளில் சுமந்து 435 கிலோமீற்றர் தூரம் நடந்துள்ளார்.
குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த லியூ லிங்சாவோ எனும் இந்நபர் இடத்துக்கிடம் கொண்டு செல்லக் கூடியதாக மூங்கில்கள் மற்றும் பொலிதீனினால் தனது வீட்டை உருவாக்கியுள்ளார்.
60 கிலோ எடையுளள இந்த வீட்டை தான போகுமிடமெல்லாம்சுமந்து செல்கிறார் 38 வயதான லியூ லிங்சாவோ.
‘நான் எங்கு வேண்டுமானாலும் செல்ல முடியும் தங்குமிட பிரச்சினை எனக்கில்லை நான் சுதந்திரமானவனாக உள்ளேன்’ என்கிறாh லியூ.
இவ்வீடு சுமார் வருடகாலமே பயன்படுத்தக்கூடியது எனவும் மூன்றாவது தடவையாக இத்தகைய வீட்டை உருவாக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் நடந்து செல்லும் போது வீதியோரங்களில் வீசப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் போத்தல்கள் முதலானவற்றையும் எடுத்து விற்பனை செய்வதன் மூலம் சூழலை சுத்தப்படுத்துவதன் மூலம் தனக்கும் வருமானம் தேடிக் கொள்கிறார்.
லண்டனில் பாகிஸ்தான் விமானம் பிரிட்டிஷ் ராணுவ விமானங்களால் சிறைபிடிப்பு-
கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் பிரச்சினை தலைதூக்கியுள்ள லண்டனில் இன்று பாகிஸ்தான் விமானம் ஒன்று சிறை பிடிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இன்றுமாலை லாகூரில் இருந்து மான்செஸ்டருக்கு 297 பயணிகளுடன் மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறங்க இருந்த பாகிஸ்தான் இன்டர்நேஷனல் விமானம் ஒன்றில் தீவிரவாதிகள் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலை அடுத்து, பிரிட்டிஷ் விமானப்படையைச் சேர்ந்த போர் விமானங்கள் இருபுறமும் சூழ்ந்து, அங்கிருந்து லண்டனுக்கு வடகிழக்கே உள்ள ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளன.
இதனால், லண்டன் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவுகிறது. தீவிரவாதம், விமானக் கடத்தல் உள்ளிட்ட அனைத்து அவசர நிலை பிரச்சினைகளையும் இங்கிலாந்து பாதுகாப்பு படையினர், ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் வைத்து கையாளுவது தான் வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் பெட்ரோல் கிடங்கில் பெரும் தீ விபத்து-
பிரேசிலின் தலைநகரான ரியோ டி ஜனேரோவில் வடக்குப் பகுதியில் பெட்ரோல் கிடங்கு உள்ளது. இங்கு பல டன் பெட்ரோல் பாதுகாக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இந்த கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த 6 எரிபொருள் டாங்குகளில் தீ பற்றி எரிந்தது. ஆரஞசு நிறத்தில் உயரமாக தீ எரிந்தது. அந்த பகுதியை மூடும் அளவுக்கு கரும் புகையை வெளியிட்டது.
வெடிச்சத்தத்துடன் ஏற்பட்ட இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. கிடங்குக்கு அருகில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.
விரைந்து வந்த தீயணைப்புப் படையினர், தீயை அணைக்க போராடி வருகின்றனர். இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை என்று தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
777ho
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger