இராணுவ முகாம் நிதி மோசடி குறித்து இருவர் கைது / தென்னை மரம் முறிந்து விழுந்து ஆறுவயது சிறுவன் பலி / 816 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது / இளைஞர்களின் இலக்கு குறித்து ஜனாதிபதி விளக்கம்


 

இராணுவ முகாம் நிதி மோசடி குறித்து இருவர் கைது-
அனுராதபுர இராணுவ முகாமில் இடம்பெற்ற 80 லட்சம் ரூபாய் நிதி மோசடி தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ தளபதியின் கட்டளையின்படி, இராணுவ விசேட விசாரணைக்குழு அவர்களை கைது செய்துள்ளது.
முகாமின் கணக்காளரும், அவருடைய உதவியாளரும் இணைந்தே இந்த நிதி மோசடியில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியமிக்கப்பட்ட கட்டணங்களுக்கு மேலதிகமாக செலுத்தப்பட்டதாக போலியான கணக்குகளை காண்பித்து, இந்த நிதிக் கொள்ளை இடம்பெற்றுள்ளது.
தென்னை மரம் முறிந்து விழுந்து ஆறுவயது சிறுவன் பலி- 
தென்னை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் 6 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். தும்மலசூரிய, சியம்பலாகஸ்ரூப்ப பிரசேத்திலே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீட்டின் முன்புறத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போது சிறுவன் இவ்விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது படுகாயமடைந்த சிறுவன் கல்முருவ பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளான்.
இச்சம்பவம் தொடர்பில் தும்மலசூரிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
816 சாராய போத்தல்களுடன் ஒருவர் கைது-
பதுளை, ஹாலி-எல பிரதேசத்தில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்டு களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த களஞ்சியசாலை ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
பதுளை பிரதேச குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலின் போது குறித்த களஞ்சியசாலை சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 816 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதன்போது சந்கேநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று (24) பதுளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
இளைஞர்களின் இலக்கு குறித்து ஜனாதிபதி விளக்கம்-
நாட்டில் சமத்துவத்தை ஏற்படுத்துவதே இளைஞர்களின் இலக்காக இருக்க வேண்டும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வில் உரையாற்றும் போது ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் மீது நம்பிக்கை வைத்ததாலேயே நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்த முடிந்ததாகவும் ஜனாதிபதி இதன் போது குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் அபிவிருத்தி முன்னெடுப்புகளுக்கு, இளைஞர்களின் சக்தி அவசியப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger