தமிழ் அகதிகளிடம் பணம் பறித்து ஏமாற்றியவர்களுக்கு வலைவீச்சு-
இலங்கை அகதிகளை, அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, ஐந்து லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய, மூன்று பேரை தேடி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் குனியமுத்தூர் அருகே வசிக்கும் அய்யப்பன் என்பவர் வீட்டுக்கு, நேற்று முன்தினம் ஐந்து இலங்கை அகதிகள் உட்பட ஏழு பேர் வந்தனர்.

குனியமுத்தூர் பொலிஸார், அய்யப்பன் வீட்டில் தங்கியிருந்தவர்களை சுற்றி வளைத்தனர்; இருவர் தப்பியோடியுள்ளனர். பிடிபட்ட ஐந்து பேரிடம் நடத்திய விசாரணையில், தர்மபுரி மாவட்ட அகதிகள் முகாமைச் சேர்ந்த சங்கர், ரத்தினராஜ், {ஹசூர் முகாமை சேர்ந்த காந்தகுமார், திருச்சி முகாமை சேர்ந்த நாகதீபன் மற்றும் மதுரை முகாமை சேர்ந்த ரமணன், தப்பியோடியவர்கள் தயா மற்றும் முரளி என தெரிந்தது.
பிடிபட்டவர்களை, தயா மற்றும் முரளி ஆகியோர் அவுஸ்திரேலியா அழைத்துச் செல்வதாக கூறி, தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம், ஐந்து லட்சம் பெற்றுள்ளனர். இத்தொகையை சென்னை, வேளச்சேரியை சேர்ந்த கவிஞன் என்பவரிடம் கொடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவுக்கு செல்ல, தயா மற்றும் முரளியை கோவைக்கு அழைத்து வந்து தங்க வைத்துள்ளனர். அப்போது தான், பொலிஸாரிடம் பிடிபட்டுள்ளனர். நேற்று மாலை ஐந்து பேரும், கியூ பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தப்பியோடிய தயா, முரளி மற்றும் பணம் வாங்கிய கவிஞன் ஆகியோர் மீது, மோசடி வழக்கு பதிவு செய்து, பொலிஸார் தேடுகின்றனர்.
தமிழக மீனவர்கள் தாயகம் திரும்பல்-
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரும் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர்.
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 26 பேரும் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்பியுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 5ம் தேதி நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மீனவர்கள் 26 பேரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இவர்கள் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆயர் செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்தனர்.
பின்னர் அவர்கள் 26 பேருக்குமான வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்றிற்கு மாற்றப்பட்டு நான்கு முறை விளக்கமறியலும் நீடிக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த 20ஆம் திகதி மீனவர்கள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
கடல்சீற்றம் காரணமாக நேற்றய தினமே சர்வதேச கடல் எல்லையில் காரைக்கால் மீனவர்கள் இந்திய கடலோரா காவல் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் தாயகம் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
உறுதியான விமர்சனங்களே நாட்டின் அபிவிருத்திக்கு உதவும்- அமைச்சர் பெசில்-
உறுதியான விமர்சனங்களே நாட்டின் அபிவிருத்திக்கு உதவியாக அமைகின்றன என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஜா-எல பகுதியில் நேற்றையதினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Post a Comment