பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக நேற்றுக் காலை பெளத்த பிக்குகள் குழுவொன்று ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்த முற்பட்டதைத் தொடர்ந்து தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனா தலைமையகக் காரியாலயத்திற்கு வெளியே பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி எதிர்ப்புப் பேரணியை நடத்த முற்பட்ட பிக்குமாரை பொதுபலசேனா உறுப்பினர்கள் தூஷித்துக் கொண்டிருந்த அதே சமயம் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைப்பதற்கென பொலிஸார் வரவழைக்கபட்டிருந்தனர். தும்முல்லையில் அமைந்துள்ள பொதுபலசேனாவின் தலைமைக் காரியாலயத்திற்கு வெளியே கடந்த மாதம் நடத்தப்பட்டிருந்த மெழுகுவர்த்தி ஏந்திய அமைதிப் பேரணியை பொதுபலசேனா அமைப்பினர் பொலிஸாரின் உதவியுடன் தடுத்து நிறுத்தியிருந்தனர்.
ஏனைய சிறுபான்மையின மதங்களை நிந்திக்கும் உரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி பிக்குகள் அடங்கிய சிறிய கூட்டத்தினர் பொதுபலசேனாவிடம் கேள்விக்கணை தொடுக்கும் பெளத்தர்கள் ’’ என்ற வாசகம் அடங்கிய பதாதையுடன் மேற்படி தலைமைக் காரியாலயத்திற்கு முன்பாக ஒன்று திரண்டிருந்தனர்.
எது எப்படியிருந்தபோதிலும் பொதுபலசேனாவின் நிறைவேற்று உறுப்பினர் டிலாந்த விதானகே பொதுபலசேனா ஆதரவாளர்கள் சிலருடன் மேற்படி கூட்டுத்தினரை நெருங்கி அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கோரினார்.
பொதுபலசேனாவுக்கு இதற்கு முன்னர் பலத்த பாதுகாப்பை வழங்கியிருந்த பொலிஸார் பின்னர்ஆர்ப்பாட்டக்காரர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு பணித்தனர்
Post a Comment