இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படும் வீட்டுத் திட்டம் கிழக்கில் இன்று புதன்கிழமை சம்பிரதாயபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் வரும் சிங்களக் கிராமமான மங்களகம மற்றும் தமிழ்க் கிராமமான பெரியபுல்லுமலை, முஸ்லிம் கிராமமான உறுகாமம் ஆகிய ஊர்களில் இந்திய அரசாங்கத்தின் வீடமைப்புத் திட்டம் இன்று சம்பிரதாய பூர்வமாக இன்று புதன்கிழமை ஆரம்பித்து வைபக்கப்பட்டது.
இந்தியத் தூதர் அசோக் கே. காந்தா, இலங்கைப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மீள் குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன், உற்பத்தித் திறன்விருத்தி அமைச்சர் பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத், பிரதித் தவிசாளர் எம்.எஸ்.எம். சுபைர், ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம, முன்னாள் முதல்வர் சி.சந்திரகாந்தன், முன்னாள் பிரதம மந்திரியின் ஆலோசகர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பலரும் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் 50 ஆயிரம் வீடுகளை அமைத்துக் கொடுக்கும் இந்திய அரசின் உதவித் திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நாலாயிரம் வீடுகளில் முறையே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டத்திற்கு தலா 2 ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன.
பெரியபுல்லுமலையில் வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து விட்டு அமைச்சர் பெருமக்கள் வெளியேறிக் கொண்டிருக்கையில் அங்கு வாசலில் நின்று கொண்டிருந்த முன்னாள் முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் தலைமை தாங்கும் ரீ.எம்.வீ.பி கட்சியின் உயர்மட்ட உறுப்பினரும் செங்கலடி வர்த்தகருமான தியேட்டர் மோகன் ‘உறுகாமத்தில் இந்திய அரசின் வீட்டுத் திட்டமா அல்லது இஸ்லாமிய குடியேற்றத்திட்டமா?’ என்ற இனத்துவேஷ துண்டுப் பிரசுரத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் இந்தத் துண்டுப் பிரசுரம் கொடுக்கப்பட்டது. பொலிஸ் மற்றும் பாதுகாப்பு உயரதிகாரிகள் முன்னாலேயே இந்தத் துண்டுப் பிரசுர விநியோகம் இடமபெற்றுக் கொண்டிருந்தது.
இதனை அடுத்து உறுகாமம் முஸ்லிம் கிராமத்திற்கு வந்திருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்ட அந்த வர்த்தகரின் இனத்துவேஷ நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டித்ததுடன் இதனை அனுமதிக்கவும் கூடாது என்றார்.
துண்டுப் பிரசுரம் விநியோகிக்கும் போது ரீ.எம்,வீ.பி கட்சியின் தலைவரும் முன்னாள் முதலைமச்சருமான பிள்ளையான் அமைதியாகப் பார்த்துக் கொண்டுதானிருந்தார்.
இந்த துண்டுப் பிரசுர விநியோகத்தால் நிகழ்வுக்கு வந்திருந்த முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பதற்றமும் அச்ச நிலையும் ஏற்பட்டது.
1990 ஆம் ஆண்டு கிழக்கிலே உறுகாமம் கிராமத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதோடு இனச்சுத்திகரிப்புச் செய்து முற்றாக வெளியேற்றப்பட்டுமிருந்தனர். இன்றளவும் அவர்கள் நாட்டின் பல பாகங்களிலும் அகதிகளாகவே காலங்கழிக்கின்றனர்.
இந்திய அரசின் வீட்டுத்திட்டமா இஸ்லாமிய குடியேற்றத் திட்டமா? எனத் தலைப்பிடப்பட்ட இனத்துவேஷத்தை தூண்டும் வகையிலான முதல் பக்கத்தில் தமிழ் மொழியிலும் மறுபக்கத்தில் சிங்களத்திலும் அச்சிடப்பட்ட துண்டு பிரசுரம் இன்று உறுகாமத்தில் வைத்து கௌரவ அமைச்சர் பசீல் ராஜ பக்ஷ அவர்கள் வரு முன் வினியோகிக்கப்பட்டது.
அவ் விடத்தில் சிவில் உடை அணித்து நின்ற போலீஸார் அவரை எச்சரித்து விட்டு ஊடனடியாக துண்டு பிரசுரங்களை தம்வசப்படுத்தியோடு மாத்திரம் இல்லாமல் அவர் பற்றி முழு தகவல்களையும் பெற்று கொண்டனர்.
உறுகாம நிகழ்வின் போது முதலமைச்சர் நஜீப் ஏ மஜீத்,ஆளுநர் மொஹான் விஜேவிக்ரம இனைத்து அத் துண்டு பிரசுரத்தை பார்வையிடுவதனை படங்களில் கானலாம்.
Post a Comment