இலங்கையின் பயன்பாட்டிற்கு உகந்த வகையிலுள்ள பத்து இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெய்யை அபுதாபியிலிருந்து கொள்வனவு செய்துள்ளதாகவும் அவை நாட்டை நோக்கி வந்து கொண்டிருப்ப தாகவும் பெற்றோலிய கைத்தொழில் அமைச்சர் அநுரபிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார்.
இதற்கமைய தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்தை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளை 24 ஆம் திகதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை ஆரம்பிக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் மாநாடு நார ஹேன்பிட்டியிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றது.
அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா இங்கு மேலும் கருத்துத் தெரிவிக்கையில்- தற்சமயம் நாட்டின் பாவனைக்கு ஏற்ப தேவையான அளவிலான எரிபொருள் கையிருப்பில் உள்ளது. எனவே- அதிக விலை கொடுத்து எரிபொருள் கொள்வனவு செய்ய வேண்டிய தேவை தற்போதைக்கு இல்லை.
2011 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதித்தது. இதன் பின்னரான ஒரு வருடத்தில் இலங்கையின் எரிபொருள் தேவையில் 20 வீதத்தையும் முதல் 6 மாதங்களில் 10 வீதத்தையும் ஈரானிலிருந்து கொள்வனவு செய்ய முடிந்தது. அதன் பின்னர் ஈரானி லிருந்து எரிபொருள் கொள்வனவு செய்யப்படவே இல்லை.
சபுகஸ்கந்தையிலுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திலுள்ள சுத்திகரிப்பு இயந்திரங்கள் ஈரான் மசகு எண்ணெய்யை சுத்திகரிக்கும் வகையிலானவை. எனவே- இலங்கைக்கு பொருத்தமான மசகு எண்ணெய்யையே சகல சந்தர்ப் பங்களிலும் அரசாங்கம் இறக்குமதி செய்து வருகிறது.
இதற்கமைய ஈரான் மசகு எண்ணெய்யைப் போன்று நைஜீரியா- லிபியா- அபுதாபி போன்ற நாடுகளின் மசகு எண்ணெய்கள் தொடர் பிலும் பரிசோதனை செய்யப்பட்டது.
இந்நிலையில் அபுதாபியின் மெர்பின் ரக மசகு எண்ணெய்யே சபுகஸ்கந்தை சுத்திகரிப்பு இயந்திரத்திற்கு ஓரளவு பொருத்தமானதாக அமைந்திருந்தது. இதனையடுத்தே உடனடியாக அபு தாபியிலிருந்து பத்து இலட்சம் மசகு எண்ணெய் பீப்பாய்களை கொள்வனவு செய்து இறக்குமதி செய்ய தீர்மானித்தோம். தற்பொழுது இலங்கையை நோக்கி வந்து கொண்டிருக்கின்றது என்றார்.
Post a Comment