இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் கடுமையாக வீழ்ச்சி


கட்டுமான, உற்பத்தி துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தகதியே பொருளாதார இறங்குமுகத்துக்கு காரணம்
கட்டுமான, சேவைத் துறைகளில் ஏற்பட்டுள்ள மந்தகதியே பொருளாதார இறங்குமுகத்துக்கு காரணம்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2012-2013 நிதியாண்டில் மிகமோசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த பத்தாண்டுகளில் ஏற்பட்டுள்ள மிகப் பெரிய வீழ்ச்சி இதுவென்று நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வரை, இந்தியா தனது பொருளாதார வளர்ச்சியை 9 வீதமாகவே தக்கவைத்து வந்திருக்கிறது.கடந்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 வீதமாகவே இருந்துள்ளது. ஜனவரி முதல் மார்ச் வரையான காலாண்டில் இது 4.8 வீதமாக இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் கடந்த பல மாதங்களாகவே பொருளாதாரத்தில் இந்த இறங்குமுகம் தென்படுகிறது.

'தற்காலிகமானது தான்': பிரதமர்

'8 வீதமாக உயரும்': பிரதமர் மன்மோகன் நம்பிக்கை
'8 வீதமாக உயரும்': பிரதமர் மன்மோகன் நம்பிக்கை
கட்டுமான, சேவைத் தொழிற்துறைகளில் ஏற்பட்ட மந்தகதியே இந்தியாவின் ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்தின் கடுமையான வீழ்ச்சிக்கும் காரணம் என்று ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
புள்ளிவிபரத்துறை அமைச்சின் தகவல்களின்படி, இந்திய தயாரிப்புத் துறையின் ஆண்டு வளர்ச்சி வீதம் 2.6 ஐ தாண்டவில்லை. அத்தோடு விவசாய- பண்ணை உற்பத்திகள் 1.4 வீதத்தாலேயே வளர்ந்துள்ளன.
எனினும் இந்த குறைந்த பொருளாதார வளர்ச்சி வேகம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியா கடந்த ஆண்டுக்கான அதன் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பை 5 வீதமாக குறைத்துக் கொண்டுள்ளதாக கடந்த பெப்ரவரியில் அறிவித்திருந்தது.
இந்திய பொருளாதாரத்தின் இந்த இறங்குமுகம் 'தற்காலிகமானது தான், விரைவில் 8 வீதமாக உயரும்' என்று பிரதமர் மன்மோகன் சிங் கடந்த மாதம் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால், பணவீக்கம் அதிகரித்துவரும் சூழ்நிலையில் இந்திய வர்த்தக சமூகம் பலத்த கவலைகளை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger