நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி / நடுவானில் பெட்ரோல் தீர்ந்ததால் குடியிருப்பில் மோதிய விமானம்

 

நடுவானில் விமானங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 பேர் பலி-
அமெரிக்காவின் அரிசோனா மாவட்ட தலைநகர் பீனிக்ஸ் அருகேயுள்ள பாலைவனப்பகுதியில் 2 விமானங்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்ட விபத்தில் 3 பேர் பலியாகினர்.
‘டீர் வேல்லி’ விமான நிலையத்தில் இருந்து மேற்கு-வடமேற்கு வான் எல்லையில் 15 மைல் தொலைவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் ஒற்றை என்ஜினுடன் பறந்த 2 சிறிய விமானங்களும் தீப்பிடித்து எரிந்ததாகவும், விபத்தில் சிக்கி 3 பேர் பலியானதாகவும் இருவர் படுகாயமடைந்ததாகவும் அவர்கள் கூறினர்.
விபத்துக்கான காரணம் குறித்து விமான நிலைய அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நடுவானில் மோதிக் கொண்ட விமானங்கள் தீப்பிழம்பாக மாறி பாலைவனத்தில் விழுந்து சிதறியதாக விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறினார்.
007நடுவானில் பெட்ரோல் தீர்ந்ததால் குடியிருப்பில் மோதிய விமானம்-
வாஷிங்டன் அருகே என்ஜின் கோளாறு காரணமாக சிறு விமானம் ஒன்று அடுக்குமாடி குடியிருப்பின் மீது மோதியது. இதில் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
அமெரிக்காவின் பிலாடெல்பியா நகரில் இருந்து, விர்ஜினியா மாநிலம் மனாஸ்சஸ் நகருக்கு இன்று ஒரு சிறு விமானம் புறப்பட்டுச் சென்றது.
2 இருக்கைகள் கொண்ட அந்த விமானம் வானில் பறந்துகொண்டிருந்தபோது, எரிபொருள் குறைய ஆரம்பித்தது. இதனால் அருகில் உள்ள டல்லஸ் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டது. ஆனால், ஹெர்ன்டான் என்ற இடத்தில் வந்தபோது, என்ஜின் செயல்படவில்லை.
இதனால் தரையிறக்க முடியாமல் போன அந்த விமானம், தலைகீழாகப் பாய்ந்து 3 மாடிகள் கொண்ட குடியிருப்பில் மோதியது. மாடியில் சொருகியதால், விமானத்தின் வால்பகுதி மட்டுமே வெளியில் தெரிந்தது. இந்த விபத்தில் விமான பைலட் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
குடியிருப்பில் வசித்த ஒரு பெண்ணுக்கும் காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்த செஞ்சிலுவை சங்க மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, குடியிருப்பில் சிக்கியிருந்த 7 குழந்தைகள் உள்ளிட்ட 16 பேரை பாதுகாப்பாக வெளியேற்றினர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger