ஒடிசாவில் 11 வயது சிறுமியை உயிரோடு எரித்துக் கொன்ற பெண்கள் கைது / 2ஜி வழக்கில் தயாளு அம்மாள் மனு தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு

 

ஒடிசாவில் 11 வயது சிறுமியை உயிரோடு எரித்துக் கொன்ற பெண்கள் கைது-
ஒடிசா மாநிலம் தியோகார் மாவட்டம், பாலிநல்லி கிராமத்தைச் சேர்ந்த ரிங்கி (வயது 11) என்ற சிறுமி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் சேர்ந்து நேற்று முன்தினம், ஒரு வீட்டின் பின்புற தோட்டத்தில் இருந்த மாதுளை மரத்தில் பழங்களை திருட்டுத்தனமாக பறித்துள்ளனர்.
பழங்களை திருடியதால் மாட்டிக்கொள்வோம் என்று ரிங்கி பயந்தார். ஆனால், இதனை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், வெளியில் யாரிடமும் சொல்லக்கூடாது என்றும், மற்ற சிறுமிகளின் தாயார்களான மோலி சாகு, சுலோச்சனா சாகு ஆகியோர் விரும்பினர்.
எனினும், செய்த தவறை நினைத்து தொடர்ந்து வருந்திய ரிங்கி, நடந்த சம்பவத்தை, பழம் பறித்த வீட்டின் உரிமையாளரிடம் கூறிவிட்டார். எனவே, மற்ற சிறுமிகளின் குட்டும் வெளிப்பட்டது.
இதனால் கடும் ஆத்திரமடைந்த அந்த சிறுமிகளின் தாயார், நேற்று ரிங்கியின் வீட்டுக்கு வந்து ரிங்கியை தாக்கியதுடன், அவர் மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது பாட்டி அங்கு வந்து, தீயை அணைத்தார்.
உடல் முழுவதும் தீக்காயம் அடைந்த ரிங்கி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்தில் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர்.
2ஜி வழக்கில் தயாளு அம்மாள் மனு தள்ளுபடி: நேரில் ஆஜராக உத்தரவு-
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாகவும், இந்த ஊழல் பணத்தில் ரூ.200 கோடி கலைஞர் டி.வி.க்கு வந்ததாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது. எனவே, 2ஜி ஊழல் வழக்கில் கலைஞர் டி.வி. இயக்குனரான தயாளு அம்மாளின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விசாரணைக்காக நேரில் ஆஜராவதில் விலக்கு அளிக்கக் கோரி தயாளு அம்மாள் சார்பில் டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 82 வயதாகும் தயாளு அம்மாள் தனக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்க அளிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
அப்போது, வழக்கின் முக்கிய சாட்சியான தயாளு அம்மாள் நேரில் ஆஜராக விலக்குக் கோருவதற்கான காரணங்கள் சரியாக இல்லை என்று கூறிய நீதிபதி, மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் தயாளு அம்மாள் விசாரணைக்காக வரும் ஜூலை மாதம் 8ம் தேதிக்குள் நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger