ரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா / கிழக்கு கணக்காய்வு அதிகாரி இடைநிறுத்தம் / மனித புதைகுழி சாட்சிகள் நீதிமன்றில்


 

ரயில் நிலை­யத்­தில் பிச்சையெடுப்பவரின் 2 மணித்தியால வருமானம் 4800 ரூபா-
கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடை­களில் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த போது கைது செய்­யப்­பட்ட யாசகப் பெண் இரண்டு மணித்­தி­யா­ல­ங்­க­ளுக்குள் பிச்­சை­யெ­டுத்து வரு­மா­ன­மாக 4800 ரூபா பெற்­ற­தாக கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
கோட்டை ரயில் நிலை­யத்­துக்குள் பிச்­சை­யெ­டுத்துக் கொண்­டி­ருந்த ஒரு பெண் உட்­பட நால்வர் ரயில்வே பாது­காப்பு ஊழி­யர்­களால் கைது செய்­யப்­பட்டு கடந்த 28 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­டனர்.
இதில் பிச்­சை­யெ­டுத்த பெண்­ணொ­ருவர் காலை 7.00 மணி முதல் 9.00 மணி­வ­ரை­யி­லான இரண்டு மணித்­தி­யா­லங்­களில் 4800 ரூபாவை வரு­மா­ன­மாகப் பெற்­ற­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
கோட்டை நீதி­மன்ற நீதிவான் திலின கமகே இந்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.
கிழக்கு கணக்காய்வு அதிகாரி இடைநிறுத்தம்-
கிழக்கு மாகாண பிரதான கணக்காய்வு அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விக்ரம மாகாண அரச சேவை ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.
மட்டக்களப்பு, வாகரையில் சைக்கிளில் சென்ற இருவரை விபத்துக்குள்ளாக்கியமை, அரச வாகனத்திற்கு சேதம் விளைவித்தமை, பொறுப்பு கூறவேண்டிய அதிகாரியின் பொறுப்பை செயற்படுத்தாமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.
அந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையிலேயே கிழக்கு மாகாண பிரதான கணக்காய்வு அதிகாரியை பணியிலிருந்து இடைநிறுத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கோரியுள்ளார்.
அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக மூவர் கொண்ட குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
மனித புதைகுழி சாட்சிகள் நீதிமன்றில்-
மாத்தளை பொது வைத்தியசாலை காணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகள் தொடர்பில் பெற்றுக் கொள்ளப்பட்ட வாக்குமூலங்கள் குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளன. இவ் வழக்கு விசாரணைகள் மாத்தளை நீதவான் சதுரிகா த சில்வா முன்னிலையில் இடம்பெறவுள்ளன.
குறித்த பிரதேசத்தில் மீட்கப்பட்ட சடலங்களில் தமது உறவினர்களதும் இருக்க கூடும் என சந்தேகித்த 11 பேர் நீதிமன்றில் உறுதிப்படுத்தல் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இவ்விடயம் தொடர்பில் அவர்களிடம் வாக்குமூலத்தை பெற்றுக் கொள்ளுமாறு மாத்தளை நீதவான் நீதிமன்று குற்றத்தடுப்பு பிரிவினரிடம் தெரிவித்திருந்தது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger