புத்தளத்தில் விபச்சார விடுதி முற்றுகை / புத்தர் சிலை திருடியவர்கள் கைது / சட்டவிரோத ரயில் பயணம்; 110 பேர் கைது


 

புத்தளத்தில் விபச்சார விடுதி முற்றுகை- 
புத்தளம் நகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை வலான குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகள் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது விபச்சார விடுதியை இயக்கி வந்த சந்தேகநபரும் (38 வயது ஆண்) விபச்சாரத் தொழிலில் ஈடுபட்ட 32 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைக்கென புத்தளம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று (30ம் திகதி) புத்தளம் நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.
புத்தர் சிலை திருடியவர்கள் கைது-
தங்க முலாம் பூசப்பட்ட புத்தர் சிலையை திருடிய குற்றச்சாட்டில் இருவர் மின்னேரிய பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருடிய புத்தர் சிலையை விற்பனை செய்ய தயார் நிலையில் இருந்த போது சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அநுராதபுரம் யுகத்தில் உருவாக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த புத்தர் சிலை ஜயந்திபுர பிரதேச வீடொன்றுக்கு அருகில் இருந்த போது திருடப்பட்டுள்ளதாக குறித்த வீட்டின் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேகநகர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோத ரயில் பயணம்; 110 பேர் கைது-
மூன்றாம் வகுப்புக்கான பயணச்சீட்டுடன், இரண்டாம் வகுப்பில் பயணித்த 110 ரயில் பயணிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 39 பேரிடம் இருந்து ஒரு இலட்சத்து, ஆயிரத்து 700 ரூபா அபராதம் அறவிடப்பட்டதோடு ஏனையோர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக ரயில்வே பாதுகாப்பு அத்தியட்சகர் சேனக ஜயசேன குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து, பொல்கஹவெல வரை பயணித்த கடுகதி ரயிலில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போதே இவர்கள் பிடிபட்டதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger