யாழ். சாவகச்சேரிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை! 2பெண்களும் 2ஆண்களும் கைது!! / யாழ். பல்கலை பேராசிரியரின் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்


 

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் விபச்சார விடுதி முற்றுகை! 2பெண்களும் 2ஆண்களும் கைது!!-யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் விடுதி ஒன்றில் விபச்சார நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு ஜோடிகள்  சாவகச்சேரி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்.சாவகச்சேரி பழைய பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் உள்ள நிரோ தனியார் விடுதியியிலேயே தவறான நடத்தையில் ஈடுபட்ட இரண்டு பெண்களும் 2 ஆண்களும் கைது செய்யப்பட்டு யாழ்.சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவச்சேரி நகர சபை தலைவர் தேகசகாயம்பிள்ளை, நகர சபை உறுப்பினர் கிசோர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தீவக இளைஞர் அணித் தலைவர் நிசாந்தன் ஆகியோர் இந்த விடுதியை முற்றுகையிட்டு பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த விடுதியில் நடைபெற்ற விபச்சார நடவடிக்கை முற்றுகையிடப்பட்டுள்ளது.
இந்த விடுதியை பொலிஸார் முற்றுகையிட்டதுடன், விடுதி உரிமையாளருக்கும் பொலிஸாருக்கும் கடும் வாக்குவாதம் நடைபெற்றுள்ளது.
இதனை அடுத்து இந்த விடுதியில் இருந்த இரண்டு ஜோடிகளை பொலிஸ் தங்கள் வாகனத்தில் கொண்டு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களை பணத்திற்காக அழைத்து வந்த நுணாவிலைச் சேர்ந்த 23 வயதுடைய ஆணும் 41 வயதுடைய ஆணும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளனர்.
அத்தோடு இந்த விடுதி சாவகச்சேரி நகர சபையின் அனுமதி இன்றி இயங்கியதாகவும் இதை சீல் வைப்பதற்குரிய நடவடிக்கையை சாவகச்சேரி நகர சபை எடுத்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி நகர சபைத் தலைவர் தேவசகாயம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலை பேராசிரியரின் பாலியல் தொல்லைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்-யாழ். பல்கலைகழக பேராசிரியர் ஒருவர் கல்வி கற்கும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியான தொல்லைகள் கொடுப்பதாக கூறி மாணவ, மாணவிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் (30) ஈடுபட்டனர்.
யாழ். பல்கலைகழக வளாகத்தினுள் இன்று காலை 10 மணிமுதல் 11 மணிவரை மாணவர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன் மாணவர்களால் பேராசிரியரின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.
குறித்த பேராசிரியர் மாணவிகளை அச்சுறுத்தி பல வருடங்களாக பாலியல் ரீதியான தொல்லைகள் மேற்கொண்டு வருவதாகவும் இதனை யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பவில்லை எனவும் மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
குறித்த பேராசிரியர் மீது மாணவர்களால் முன்வைக்கப்பட்ட 25 குற்ற சாட்டுக்களில் முக்கியமானவை,
01) மாணவிகளிடம் தொலைபேசி எண் தருமாறு வற்புறுத்தல், பெண்களை தனியாக அறைக்கு வருமாறு கூப்பிடுதல், பரீட்சை வினாத்தாள்கள் எடுப்பதற்கு ஒவ்வொரு மாணவியையும் தனித்தனியாக வரவேண்டும் என வற்புறுத்துகின்றமை.
02) தொலைபேசி எண்ணைப் பெற்றுக் கொண்டு குறுந்தகவல் அனுப்பியமை, தனக்கு எதிராக செயற்படுபவர்களை காட்டித்தருமாறு வற்புறுத்தியமை, தன்னுடைய பாடத்தை எடுக்குமாறு கட்டாயப்படுத்தியமை, இதனோடு பரீட்சை வினாத்தாளில் பெயர் எழுதும்படி வற்புறுத்தியமை.
03) குறைந்த புள்ளி எடுப்பவர்களைத் தனது பிரத்தியேக அறையில் வந்து சந்திக்கும்படியும் சந்தித்தால் மட்டுமே புள்ளி வழங்குவேன் என்றும் கூறியமை, தனது பிரத்தியேக அறைக்கு 2 மணிக்குப் பின்னர் தனியாக வந்து சந்திக்க கூறுகின்றமை.
04) தன் செயற்பாடுகளுக்கு உடன்பட்டால்தான் நல்ல புள்ளிகளை வழங்குவேன் என அச்சுறுத்துகின்றமை, தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்கு இறுதியாக புள்ளிச் சான்றிதழ் வழங்கும் போது இது முழுமையான பட்டம் அல்ல என எழுதி விடுவேன் எனப் பயமுறுத்தியமை.
05) துணைப்பாடமாகத் தனது பாடத்தை எடுக்காத மாணவர்களுக்குத் தற்காலிக விரிவுரையாளர் பதவியை வழங்க மாட்டேன் எனக் கூறியமை, துணைப் பாடத்தனை வேறு துறைகளிலோ வேறு பாடங்களிலோ எடுக்க கூடாது என வற்புறுத்துகின்றமை.
06) தனியாக சந்திக்கும் மாணவிகளிடம் பரீட்சை விடைத் தாள்களின் பின்னர் வெற்றுத் தாளைகளைச் சேர்த்துக் கட்டுமாறு தனக்கு இசைவாக நடக்கும் பட்சத்தில் உயர்ந்த புள்ளிகளை வழங்குவதற்கு வாய்ப்பாக அமையும் என கூறுகின்றமை.
07) தொலைபேசி எண் கேட்டபோது தொலைபேசி இல்லை எனப் பதில் கூறியமைக்கு புதிய தொலைபேசி வாங்கித்தரவா? எனக் கூறியமை, தொலைபேசி எண்களுக்கு குறுந்தகவல் அனுப்பியபோது அதற்கு பதிளிக்காத மாணவிகளை அறைக்குள் அழைத்து மிரட்டியமை.
08) அனைத்து மாணவிகளுடைய விபரங்களையும் பதிவாளர் அறையில் சென்று முகவரி உட்பட அனைத்து விடயங்களையும் பெறுவேன் என மிரட்டியமை, தனக்கு இசைவாகாத எந்தவொரு மாணவியையும் சிறப்புக் கலைப் பாடத்தலிருந்து பொதுக்கலைப் பாடமாக மாற்றி வெளியேற்றுவேன் என கூறுகின்றமை.
09) தொலைபேசி எண் கேட்டுக் கொடுக்காத பெண் பிள்ளைகளுக்கு இறுதிப் பரீட்சைக்கு கையொப்பம் இடமாட்டேன் என்று மறுத்துள்ளமை.
10) வகுப்பறையில் பரீட்சையில் குறைந்த புள்ளி எடுத்த ஆண் மாணவர்களை ரியூட்டோரியல் எழுதித் தரும்படியும் பெண் பிள்ளைகளைத் தனித்தனியாக தனது அறையில் சந்திக்கும்படியும் கூறியமை.
11) அவருக்கு எதிரான துண்டுப் பிரசுரங்கள் பல்கலைக்கழகத்தில் காணப்பட்ட பொது அதற்குக் காரணம் பொருளியல்துறை மாணவிகளே எனக் கூறி அதற்காகவே முதலாம் பருவ Mathematics Paper பரீட்சையில் மிகக் கடினமாகப் போட்டேன் என வகுப்பறையில் கூறியமை.
12) தான் கூறும் விடயங்களை வெளியில் கூறக் கூடாது என்றும் அப்படிக் கூறும் பட்சத்தில் நீங்கள் எப்படி சித்தியடைந்து போவீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்கிறேன் எனவும் வகுப்பில் கூறியமை.
13) பீடாதிபதிக்கோ ஏனையோர்களுக்கோ தான் கட்டுப்பட மாட்டேன் என்றும் ஏனைய விவுரையாளர்களைக் கூடப் பதவியிலிருந்து நீக்கும் அதிகாரம் தனக்கு இருக்கிறது என்றும் அதற்கேற்ப மாணவர்களை நடந்து கொள்ளும்படியும் கூறியமை.
மேற்குறித்த பிரச்சினைகளை முன்வைத்து மாணவர்கள் ஒன்றியதினால் இவ்விடயம் ஆதாரங்களுடன் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தப்பட்டது.
இந்நிலையில் குறித்த பேராசிரியர் அவரது பதவியில் கடந்த மாதம் 16ஆம் திகதியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்தன.
இவ்விடயம் தொடர்பாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் பல்கலைக்கழகத்திடம் உள்ளக விசாரணையை மேற்கொள்ளுமாறே முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தது.
எனினும் மாணவிகளுக்கு நேர்ந்துள்ள இப்பிரச்சினை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என குறிப்பிட்டு மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை யாழ். பல்கலைக்கழக பேராசிரியர், விரிவுரையாளர்கள் உள்ளடக்கிய ஐந்து பேர் மாணவிகளுடன் தொடர்ந்தும் பாலியல் ரீதியான தொல்லைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள் என கடந்த வருடம் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் துண்டுப் பிரசுரங்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் இரு பேராசிரியர்களது பெயரும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger