ஆறு வீதமான குழந்தைகள் நிறைகுறைந்தே பிறக்கின்றன : பிரதியமைச்சர் லலித் திஸாநாயக்க


நாடளாவிய ரீதியில் போசாக்கின்மையை குறைக்க அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. நாட்டில் தற்போது பிறக்கின்ற குழந்தைகளுள் ஆறு வீதமானவை நிறை குறைந்தவையாக காணப்படுவதுடன் 65 சதவீதமானோர் போசாக்கு குறைப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார அமைச்சர் லலித் திசாநாயக்க தெரிவித்தார்.



கொழும்பு 10 இல் அமைந்துள்ள சுகாதார கல்வி பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

2013 ஆம் ஆண்டில் நாட்டில் 65 வீதமானோர் போசாக்கு குறைப்பாடு காரணமாக பாதிப்படைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. அவர்களில் 5 வயதிற்கு குறைவான பிள்ளைகள் 13 வீதமும் 16 வீதமானோர் கர்ப்பிணி பெண்களும் 22 வீதமானோர் மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

போஷாக்கு உணவு குறித்து மக்கள் மத்தியில் போதியளவு தெளிவின்மையே போஷாக்கு குறைப்பாட்டிற்கு காரணமாக அமைகின்றது. இதனால் உடல் ரீதியில் மாத்திரம் அல்லாது உள ரீதியாகவும் மக்கள் பாதிப்படைகின்றனர்.

கிராமப்புற மக்களை விட இன்று நகர் புற மக்களே அதிகளவான நோய்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். காரணம் வேலைப் பளுவாலும் பொதியிடப்படும் உணவுகளை அதிகளவு உட்கொள்வதனாலேயே அவர்கள் அவர்களுக்கு தேவையான போஷாக்கு குறைவாகவே கிடைக்கின்றது.

எதிர்வரும் ஜூன் மாதம் சர்வதேச போஷாக்கு மாதமாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இம் மாத்தில் நாட்டு மக்களிடையே போஷாக்கு தொடர்பான தெளிவினை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் முதல் கட்டமாக பாடசாலை மாணவர்கள் மத்தியில் செயற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பிரதேசங்கள் தோறும் போஷாக்கு சபை ஆரம்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்பலாம் என்றார்.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger