மத்திய பிரதேச மாநிலத்தில் வரதட்சணை கொடுமையில் இளம் வயது பெண்ணை தீயிட்டு கொளுத்திக் கொன்றதாக அப்பெண்ணின் கணவர், மாமனார் மற்றும் மாமியார் மீது போலீசார் மத்திய பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி, '100 சதவீத தீக்காயங்களுடன் அந்த பெண் அளித்த வாக்குமூலத்தை ஏற்புடையதாக கருத முடியாது. எனவே குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்கிறேன்' என தீர்ப்பளித்தார்.
இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
மேல் முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் விடுதலை செய்யப்பட்ட 3 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
நீதிபதிகள் பி.எஸ்.சவுகான் மற்றும் தீபக் மிஸ்ரா ஆகியோர் தங்கள் தீர்ப்பில், 'எல்லா வழக்குகளிலும் டாக்டர்கள் வழங்கும் சான்றிதழை முக்கிய ஆதாரமாக கருத முடியாது.
சந்தர்ப்ப சாட்சியத்தையும் இறக்கும் முன்னர் ஒருவர் தரும் வாக்குமூலத்தையும் முக்கிய தடயமாக கருத வேண்டியுள்ளது.
இறக்கும் முன்னர் ஒருவர் தரும் வாக்குமூலத்தை பதிவு செய்வதற்கான வழிகாட்டி நெறி முறைகள் என்று ஏதுமில்லாத நிலையில், வாக்குமூலம் அளிப்பவர் சரியான மன நிலையில் உள்ளாரா? என்பதை வாக்குமூலம் பெறுபவர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இந்த வழக்கை பொருத்தவரை வாக்குமூலம் அளித்த பெண், நல்ல மன நிலையில் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் தன்னை தீயிட்டு கொளுத்தியதாக தெளிவான முறையில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
எனவே அவர்கள் 3 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கிறோம்' என்று குறிப்பிட்டுள்ளனர்.
Post a Comment