லண்டன் வீதியில் பட்டப் பகலில் துணிகரம்: ராணுவ வீரர் தலை துண்டித்து படுகொலை




லண்டன் நகரின் உல்விச் வீதியில் ராணுவ வீரர்களின் பாசறை பகுதி ஒன்றுள்ளது. இப்பகுதியின் சாலை வழியே வந்துக்கொண்ருந்த ராணுவ வீரரை வழிமறித்த இருவர் அரிவாளால் அவரது தலையை துண்டித்து வெட்டிக் கொன்றனர்.

ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த படுகொலையை செய்துவிட்டு தப்பியோட முயன்ற 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். 

குண்டு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படுகொலை இஸ்லாமிய தீவிரவாத (?) தாக்குதலாக இருக்கலாம் என போலீசார் கூறுகின்றனர். 

இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், போலீஸ் உயர் அதிகாரிகளின் அவசர ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளார். 

இந்த படுகொலையின் தொடர்ச்சியாக லண்டனில் வசிக்கும் சிறுபான்மை இனத்தவருக்கான பாதுகாப்பை பலப்படுத்த போலீசாருக்கு உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது
.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger