பாகிஸ்தானின் முக்கிய துறைமுகங்களில் ஒன்றான குவாடர் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தத்தை சீனா கடந்த ஆண்டு பெற்றது.
எண்ணெய் வளம் மிக்க அரபு நாடுகளில் இருந்து பெட்ரோலிய கச்சா எண்ணெய் ஏற்றிவரும் கப்பல்களுக்கு இந்த துறைமுகம் தான் மிக குறைந்த தூரத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹோர்மஸ் ஜல சந்திப்பு பகுதியில் இந்த துறைமுகம் அமைந்துள்ளது. இங்கிருந்து மேற்கு சீனாவின் துறைமுகங்கள் வெகு அருகாமையில் அமைந்துள்ளதால் குவாடர் துறைமுகத்தை சாலை, ரெயில், விமானம் மார்க்கமாக இணைக்கும் ஒப்பந்தத்தில் பாகிஸ்தான்-சீனா அதிகாரிகள் நேற்று கையொப்பமிட்டனர்.
சீனப் பிரதமர் லீ கெகியாங் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டதாக பாகிஸ்தான் அரசு வெளியிட்ட செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
இந்திய வெளியுறவு துறை மந்திரி சல்மான் குர்ஷித் கடந்த மாதம் ஈரான் நாட்டிற்கு சென்றபோது, இதே போல் அங்குள்ள சபஹார் துறைமுகத்தை கையாளும் ஒப்பந்தம் இந்தியா-ஈரான் இடையே கையொப்பமானது.
குவாடர் துறைமுகத்தில் இருந்து 76 கி.மீட்டர் தொலைவில் சபஹார் துறைமுகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment