சவுதியில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்கள்-
சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருந்த 350 இலங்கையர்கள் கடந்த சில நாட்களாக நாடு திரும்பி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக சவுதியில் தங்கியிருந்த 350 இலங்கையர்கள் கடந்த சில நாட்களாக நாடு திரும்பி வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக பணியகத்தின் ஊடகப் பேச்சாளரும் பிரதி இணைப்பதிகாரியுமான மங்கள ரன்தெனிய குறிப்பிட்டுள்ளார்.
அவர்களுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜித்தாவிலுள்ள இலங்கை கென்சியூலர் அலுவலகத்திற்கு முன்பாக 250க்கும் அதிகமானவர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரகெட்டியவில் இளைஞர் சுட்டுக்கொலை-
வீரகெட்டிய பெஹிரிகொடுவ – வக்கமுல்ல, ஹக்குருவெல்ல பகுதியில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வீரகெட்டிய பெஹிரிகொடுவ – வக்கமுல்ல, ஹக்குருவெல்ல பகுதியில் இனந்தெரியாத நபர்களால் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் நேற்று இரவு 10.30 அளவில் வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளை, இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துஷான் மதுசங்க என்ற 26 வயது இளைஞரே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. வீரகெட்டிய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Post a Comment