கால் நடைகள் வெட்டுவதை தடை செய்யுமாறு விமல் கோரிக்கை / யாழ். ஆதார வைத்தியசாலைகள் உள்ள போதும், போதனா வைத்தியசாலைக்கு அதிகம் பேர்?!

 

கால் நடைகள் வெட்டுவதை தடை செய்யுமாறு விமல் கோரிக்கை-
கால்நடைகளை வெட்டுவது இலங்கையில் தடை செய்யப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்ணனியின் தலைவர் விமல் வீரவன்ச ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மிருக வதைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பௌத்த பிக்கு ஒருவர் தீக்குளித்தமையை விமல் வீரவன்ச சுட்டிக் காட்டியுள்ளார்.
இதற்குப் பின்னராவது ஜனாதிபதி கால்நடைகளை வெட்டுவதனை தடை செய்யவேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
கால்நடைகளை கொல்வது இந்நாட்டில் வாழும் பௌத்த மற்றும் இந்து மக்களிற்கு பாவமான விடயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஆதார வைத்தியசாலைகள் உள்ள போதும், போதனா வைத்தியசாலைக்கு அதிகம் பேர்;-
யாழ்.மாவட்டத்தில் நான்கு ஆதார வைத்தியசாலைகள் சகல வசதிகளுடன் இயங்குகின்ற போதிலும் யாழ். போதனா வைத்தியசாலை விடுதிகள் நிரம்பி வழியும் நிலை தொடர்வதற்குக் காரணம் என்ன என்று மாகாண சுகாதார திணைக்களத்தினரிடம் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
மாகாண சுகாதார நிர்வாகத்துக்கு உட்பட்ட ஆதார வைத்தியசாலைகளுக்கு போதிய அளவு வைத்திய அதிகாரிகள், மருத்துவ உபகரணங்கள் போன்ற வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த வைத்தியசாலைகளிலிருந்து தினமும் நூற்றுக்கு மேற்பட்ட நோயாளர்கள் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.
ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கக்கூடிய நிலையில் உள்ள சாதாரண நோயாளர்கள் கூட அம்புலன்ஸில் ஏற்றி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்திய அதிகாரிகள் நோயாளர்களின் நலன்கருதி அனுப்புகிறார்களா? அல்லது தமது நலன் கருதி செயற்படுகிறார்களா? என்று மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
குறிப்பாக இரவு வேளையில் கொண்டு வரப்படும் சாதாரண காய்ச்சல் நோயாளரைக் கூட விடுதியில் தங்க வைக்காமல் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி விடுகிறார்கள். அந்த நோயாளி மறுநாள் காலை வீடு திரும்புகிறார். நோயாளர்களுக்கு ஏன் இந்த அவலநிலை.
வைத்தியசாலைக்குச் சிகிச்சை பெற வருபவர்கள் வசதி படைத்தவர்கள் அல்ல. யாழ்ப்பாணம் அனுப்பப்படுவதால் நோயாளிக்கு அல்லது அவரது குடும்பத்தினருக்கு ஏற்படக்கூடிய செலவுகள் பற்றி எவரும் சிந்திப்பதில்லை என மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வைத்தியசாலையில் சுழற்சி முறையில் கடமையாற்றக்கூடிய வைத்திய அதிகாரிகள் இருந்த போதிலும் அங்குள்ள விடுதிகளில் உள்ள கட்டில்களில் பெரும்பாலானவை வெறுமையாகவே காணப்படுகின்றன.
யாழ்.போதனா வைத்தியசாலையில் பெறப்பட்ட புள்ளி விவரங்களின்படி விடுதிகளில் தங்கி சிகிச்சை பெற்ற ஒரு லட்சம் பேரில் 80 வீதமானோர் ஆதார வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அம்புலன்ஸில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள் எனத் தெரிய வருகிறது.
போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் காலில் பம்பரம் கட்டியது போன்று உட்கார முடியாத அளவுக்கு சேவையாற்றும் போது ஆதார வைத்தியசாலை வைத்திய அதிகாரிகள் விடுதிகளில் நோயாளர் இல்லாத நிலையில் கடமையாற்றுவது உயர் அதிகாரிகளின் கண்ணுக்குத் தெரிவதில்லையா? அல்லது அவர்களும் கண்டும் காணாதது போன்று இருக்கின்றனரா? என பல்வேறு கேள்விகளை மக்கள் மாகாண பிராந்திய சுகாதார திணைக்களத்தினரிடம் கேட்கின்றனர்.
 
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger