பிக்குவின் இறுதிச் சடங்கு குறித்து மோதல் / மூழ்கிய மாணவர்கள் கடற்படையினரால் மீட்பு


 

news-breaking-news-005பிக்குவின் இறுதிச் சடங்கு குறித்து மோதல்-
கண்டி தலதா மாளிகைக்கு முன்னால் தீக்குளித்து உயிரிழந்த பௌத்த பிக்குவின் பூதவுடலை இரத்தினபுரி கஹவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பில் பௌத்த மத தலைவர்களைக் கொண்ட இரு குழுக்களுக்கிடையில் மேதல் நிலை ஏற்பட்டுள்ளது.
கொழும்பு, பொரள்ளை தனியார் மலர்சாலை ஒன்றில் இன்றுமுற்பகல் 10.45 மணியளவில் இடம்பெற்ற இந்த மோதலை கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அநுர சேனாநாயக்க அவ்விடத்திற்கு வந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
அநுர சேனாநாயக்க மோதலை கட்டுப்படுத்த முயற்சித்துள்ள போதும் தற்போதும் மோதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூழ்கிய மாணவர்கள் கடற்படையினரால் மீட்பு-
அம்பாறை, அட்டாளைச்சேனை பாலமுனை கடலுக்கு குளிக்க சென்று கடலில் மூழ்கிய நான்கு மாணவர்களையும் கடற்படையினர் மீட்டெடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, நிற்கவூர் அல்அஸ்ரக் தேசிய பாடசாலையில் 8 ம் தரத்தில் கல்வி கற்கும் எஸ்.ஜே.எம். நஸாத், பாலமுனையை சேர்ந்த எம்.எஸ்.எம். சினாஸ், எம்.எஸ்.எம். பௌவாஸ் மற்றும் பாலமுனையைச் சேர்ந்த எஸ்.மபாஸ் ஆகிய நான்கு மாணவர்களும் பாலமுனை கடலில் குளித்துக் கொண்டிருக்கும் போது நஸாத், சினாஸ் ஆகிய இருவரும் கடலலையில் சிக்குண்டு இழுத்து செல்லப்பட்ட போது அடுத்த இரு மாணவர்களும் கூக்குரலிட்டனர்.
அருகில் நின்றவர்கள் கடற்படையினருக்கு அறிவித்ததையடுத்து கடற்படையினர் இருவரையும் மீட்டு பின்னர் நான்கு மாணவர்களையும் பொலிஸில் ஒப்படைத்ததையடுத்து நான்கு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger