13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்க கோத்தபாயவுக்கு அதிகாரமில்லை -வாசு-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக ஜாதிக ஹெல உறுமயவினால் முன் வைக்கப்படவுள்ள தனி நபர் பிரேரணை செல்லுபடியற்றதாகும்.
எனவே, அரசு மேற்படி பிரேரனைக்கு அங்கீகாரம் வழங்காது என்று மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
13 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் கருத்துக்களை தெரிவிப்பதற்கு பாதுகாப்பு செயலாலர் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு அதிகாரமோ உரிமையோ கிடையாது தேசிய அரசியல் செயற்பாடுகள் குறித்து பாராளுமன்றமே தீர்மானிக்கும். இதுவே அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பொலிஸ், காணி அதிகாரங்கள் தொடர்பில் கூட்டணிக் கட்சிகளுடன் பேசியே இறுதி முடிவு -பசில்-
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் அதில் உள்ள பொலிஸ், காணி அதிகாரங்கள் குறித்து ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கின்ற கட்சிகளினால் முன்வைக்கப்பட்டுள்ள பல்வேறு யோசனைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கப்பாட்டுக்கு வருவோம்.

இறுதிவரை இந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடல்களை நடத்தவே எதிர்ப்பார்க்கின்றோம் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பஷில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள் எதிர்வரும் வட மாகாண சபைத் தேர்தலில் வாக்களிக்கக்கூடிய வகையில் வாக்காளர் இடாப்பு பதிவு சட்டமூலத்தில் திருத்தத்தைக் கொண்டு வந்து எதிர்வரும் ஆறாம் திகதி அதனை நிறைவேற்றவுள்ளோம்.
தமிழ்க் கூட்டமைப்பு என்னதான் எதிர்ப்புக்களை முன்வைத்தாலும் அந்த சட்டமூலம் நிறைவேற்றப்படுமென என்றும் பஷில் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment