எய்ட்சை விட வேகமாக பரவி மரணத்தை ஏற்படுத்தக்கூடிய பால்வினை நோய் பயம் ஜப்பான் மக்களை ஆட்கொண்டுள்ளது. ஜப்பானில் பாலியல் தொழில் செய்து வரும் 31 வயது பெண்ணிடம் 2 ஆண்டுகளுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் எச்ஓ41 எனப்படும் கொனோரியா நோய்க்கிருமியின் தாக்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளுக்கு கட்டுப்படாமல், எய்ட்ஸ் கிருமியை விட அதிபயங்கர வீரியத்துடன் நோயாளியை வீழ்த்தும் இந்த கிருமியை அழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க 5 கோடி டாலர்களை ஜப்பான் அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
|
எச்ஓ41 நோய்க்கிருமியின் பாதிப்புக்குள்ளானவர்கள் சிகிச்சை பலனின்றி ஒரு சில நாட்களிலேயே இறந்து விடுவார்கள். மேலும், இந்த நோய் எய்ட்சைவிட அதிக வேகமாக பரவக்கூடியது என்பதால் ஜப்பான் சுகாதாரத்துறை அதிகாரிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.
|
ஜப்பானில் வேகமாகப் பரவும் எய்ட்சை விடக் கொடிய பால்வினை நோய்!
Labels:
சமூக அவலம்
Post a Comment