மலேசிய நாடாளுமன்றத்தில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டு 4 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 222 இடங்களில் நஜீப் ரசாக் தலைமையிலான ஆளும் பாரிசான் தேசிய முன்னணி கூட்டணி 133 இடங்களில் வென்றி பெற்றது. இது ஆட்சி அமைக்கத் தேவையான எண்ணிக்கையை விட 21 இடங்கள் கூடுதலாகும். அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மக்கள் கூட்டணி 89 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆளும் கூட்டணியின் ஆதரவுடன் 9 இடங்களில் மலேசிய இந்திய காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. கட்சித் தலைவர் ஜி.பழனிவேல், ஜனநாயக செயல்பாடுகள் கட்சியின் எம்.மனோகரனை 462 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
|
இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர்கள் டாக்டர். எஸ்.சுப்பிரமணியன், எம்.சரவணன், இளைஞர் பிரிவு தலைவர் பி.கமலநாதன் ஆகியோரும் வெற்றி பெற்றனர். கட்சியின் பொதுச் செயலாளர் என்.முருகேசன், துணைத் தலைவர் எஸ்.கே.தேவமணி, செய்தி தொடர்புத் துறை தலைவர் வி.எஸ்.மோகா, ஏ.சக்திவேல், பிரகாஷ் ராவ் ஆகியோர் தோல்வியடைந்தனர்.மாகாண தொகுதிக்கான தேர்தலில் 18 இடங்களில் போட்டியிட்ட மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சியால் 5 இடங்களில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. எனினும் 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலுடன் ஒப்பிடும்போது இத்தேர்தலில் கூடுதலான தொகுதிகளே கிடைத்துள்ளன. அப்போது, 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டு 3 இடங்களிலும், 19 மாகாண தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களிலும் அக்கட்சி வெற்றி பெற்றது.
|
மலேசிய இந்திய காங்கிரசுக்கு ஏமாற்றம் - 4 தொகுதிகளிலேயே வெற்றி!
Labels:
சர்வதேசம்
Post a Comment