சிலிங்கோவில் முதலிட்ட முஸ்லிம்கள் றிஸ்வி முப்திக்கு திறந்த மடல்



Rizvi Mufthi

பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது மனைவி பெயரில் சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய வங்கியில் இருந்து 140 மில்லியன் ருபா எடுத்துள்ளார், அவர் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியர்.
-அஸ்ரப் ஏ சமத் -
சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய வங்கியில் முதலிட்ட முஸ்லீம்களது 89 கோடி ரூபா பணத்தினை மீளப் பெற்றுக் கொள்வது எவ்வாறு? இப் பணத்தினை முதலீட்ட முஸ்லீம்களது பணத்தினை மீளக் பெற்றுக் கொள்வதற்கு யாரை நாடுவது ? என இதி முதலிட்ட முஸ்லிம் மக்கள் ஏங்கித் தவிக்கின்றனர்.
இலங்கை மத்திய வங்கியில் பதியப்படாத ஒரு இஸ்லாமிய வங்கிக்கு ஷரியா சான்றுதழ் ஜம்மியத்துல் உலமா எவ்வாறு வழங்கியது ? என பாதிக்கப்பட்டவர்கள் கேட்கின்றனர்.
கடந்த ஞயிற்றுக்கிழமை மே (05)ம் திகதி சிலிங்கோ இலாப பங்கீட்டு முதலீட்டாளர்க்ள சங்கமொன்றை ஏற்படுத்தி நிருவாக சபையொன்றை அமைத்து மாளிகாவத்தையில் உள்ள இஸ்லாமிய நிலையத்தில் ஒன்று கூடினார்கள். இக் கூட்டத்திற்கு சிலிங்கோ கம்பணியின் உதவித் தலைவர் ஜயதிஸ்ச சமுகமளித்திருந்தார்.
இப் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர் சங்கம் அகில இலங்கை ஜம்இய்த்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முப்திக்கு திறந்த மடல் ஒன்றை அனுப்பியுள்ளது.
இக்கடிதத்தினை இச் சங்கத்தின் தலைவர் மும்தாஸ் ரஹ்மான், உதவிச் செயலாளர் எம்.எஸ்.ஏ.எச். மொஹிதீன் கையொப்பமிட்டுள்ளனர்.
அக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ரமழான் மாதத்தின் ஸஹர் வேளையில் வானொழியுடாக அ.இ.ஜ. உலமாவின் பல அங்கத்தவர்கள் சிலிங்கோ இ.ப.இ. பிரிவை ஆர்வமுட்டி பிரச்சாரம் செய்தார்கள் என்பது மிகவும் தெரிந்த விடயம்.
பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தனது மனைவி பெயரில் சிலிங்கோ இலாப பங்கீட்டு இஸ்லாமிய வங்கியில் இருந்து 140 மில்லியன் ருபா எடுத்துள்ளார். பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவை இது பற்றி ஆலோசனைக்கு அழைத்து வரும்படி ஜம்மியத்துல் உலமாவிடம் பாதிக்கப்பட்ட சங்கம் வேண்டுகோள் விடுத்தாகவும் இச் சங்கம் தெரிவித்துள்ளது.
அவர் ஒரு மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசியல்வாதி என்பதால் அவர் பொது மக்களிடத்தில் பொறுப்புச் சொல்ல வேண்டியர். இப் பணத்தினை அவர் பெறும்போது அவர் விமான நிலையத்தின் தலைவராக கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
எனினும் இவ் விடயத்தில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இன்னமும் மொளனமாக இருப்பது கவலைக்குரிய விடயமாகும். முதலீட்டாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக்கு உதவுவதற்கும் இதுவரை உரிய முஸ்லீம் அமைச்சர்கள் பிரதியமைச்சர்களுக்கு அரசாங்கத்திற்கும் அறிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா சிலிங்கோ இலபா பங்கீட்டு இஸ்லாமிய வங்கிக்கு ஷரிஆ அனுமதி வழங்கி முஸ்லீம்கள் இவ் வங்கிக்கு தமது முதலீடுகளை வழங்கும் படி 27.01.2006ல் ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தது.
இவ் வங்கியின் ஷரிஆ மார்க்க சட்ட ஆலோசனைச் சபை ஒன்றையும் அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா நியமித்திருந்தது. இலங்கை மத்திய வங்கியில் பதியப்படாத இவ் நிறுவனத்திற்கு அன்று எவ்வாறு இலங்கை ஜம்இயத்துல் உலமா அங்கீகாரம் வழங்கியது.
ஜம்மியத்துல் உலாமாவின் விளம்பாரத்தை பார்த்து மாவனெல்லை, பம்பலப்பிட்டி, சம்மாந்துறை, காத்தான்குடி, அக்கரைப்பற்று, பேருவளை, காலி, கம்பளை , அக்குரணை புத்தளம் போன்ற பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் தமது வீடுகளை விற்று அல்லது தனது மகளின் கல்யாணத்திற்காக வைத்திருந்த பணம், வெளிநாட்டில் உழைத்த பணம், நோய்வாய்பட்டு வியாபாரம் செய்ய முடியாமல் தனது வியாபர ஸ்தாபணத்தினை விற்று அல்லது 40, 30 வருடங்களாக சேவை செய்து தனது அரச தணியார் கம்பிணிகளில் வேலைசெய்தவர்கள் தமது ஓய்வுபெற்ற ஈ.பி.எம், ஈ.ரீ.எப் பணத்தினையே இவ் வங்கிகளில் 2006 ஆம் ஆண்டுப்பகுதிகளில் நாங்கள் முதலிட்டோம்.
எனவே இதனை மீளப்பெற உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger