|
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடித்ததில் 20 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும், 70 பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். பாகிஸ்தானில் வரும் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதற்கான பிரசாரம் உச்சகட்ட நிலையில் உள்ளது.இந்நிலையில், ஜமியத் உலேமா இ இஸ்லாம் பாஜி கட்சியின் சார்பில் மத்திய குர்ரம் பகுதியில் பிரசார பேரணி நடந்தது. அங்குள்ள மதராசாவில் இருந்து பேரணி தொடங்கியது. அப்போது அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதில், அங்கிருந்த 20 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும், 70க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.
|
கட்சியின் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான முனிர் கான் ஒரக்ஜாய் காயங்களுடன் உயிர்தப்பினார். பழங்குடியினர் அதிகம் வசிக்கும் குர்ரம் பகுதியில் நடந்த இந்த குண்டுவெடிப்பால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரையில் எந்த தீவிரவாத அமைப்பும் இந்த குண்டுவெடிப்புக்கு பொறுப்பு ஏற்கவில்லை.
|
பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரப் பேரணியில் குண்டுவெடிப்பு - 20 பேர் பலி!
Labels:
சோகம்
Post a Comment