முஸ்லிம்களின் காதி நீதிமன்றம் எதற்கு? பொதுபலசேனா கேள்வி / பந்தயத்துக்கு காட்ஸ் விளையாட்டியவர்கள் கைது

 

pikku.bbsகாதி நீதிமன்றம் எதற்கு? பொதுபலசேனா கேள்வி-
நாட்டில் நீதிமன்றம் ஒன்று இருக்கையில் காதி நீதிமன்றம் ஒன்று தேவையாவென பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கேள்வியெழுப்பியதுடன் இந்த நீதிமன்றத்தில் தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது ஒரு பௌத்த நாடு. இங்கு எல்லா மதங்களுக்கும் கௌரவம் அளிக்கப்படுகின்றது. நாட்டில் நீதிமன்றம் ஒன்று செயற்படுகின்ற வேளையில் ஏன் தனியான காதி நீதிமன்றம் ஒன்று இயங்குகின்றது?
அங்கு தான் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளுக்கும் சட்ட அங்கீகாரம் கிடைக்கின்றது.
இந்நிலையில் ஒவ்வொரு மதங்களுக்கென்றும் தனியான திணைக்களங்கள் இருக்கின்றன. ஆனால் பௌத்த பிரிவில் அவ்வாறில்லாது சர்வ மத பிரதிநிதிகளும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
சர்வ மத அமைப்பு என்ற போர்வையில் பௌத்த மதத்தை ஒருபோதும் சீரழிக்க விட முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பந்தயத்துக்கு காட்ஸ் விளையாட்டியவர்கள் கைது- 
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை கோறக்கோவில் பகுதியில் கட்டுப்பணம் செலுத்தி காட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்த 14 நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பொலிஸார் 14 நபர்களை கைது செய்துள்ளதுடன் அவ்விடத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபா பணத்தினையும் மீட்டெடுத்துள்ளனர்.
மேற்படி பகுதியில் கடந்த பல நாட்களாக இவர்கள் காட்ஸ் விளையாட்டில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இது குறித்து உடனடியாக செயற்பட்ட பொலிஸார் இவர்களை கைது செய்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி ரி.கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தியமைக்கிணங்க தலா 1000 ரூபா தண்டப் பணத்தில் இவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger