சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் பொறிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை உயர்நீதிமன்றம் யூன் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தேசிய புகையிலை மற்றும் மதுபான அதிகாரசபையின் ஒழுங்கு விதிகளை நடைமுறைப்படுத்தாமல் தடைச் செய்யக் கோரிய மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரிப்பதற்கு அனுமதித்த உயர்நீதிமன்றம் அதற்கான ஆதாரங்களையும் அன்றையதினம் சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளது.
சிகரெட் பெட்டிகளில் எச்சரிக்கை படங்கள் பொறிப்பதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தலை செல்லுபடியற்றதாக்க வேண்டுமென சிலோன் ரொபாக்கோ கம்பனி கோரிய தடையுத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் நிராகரித்துள்ளது.
இந்த மனுவில் சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின் செயலாளர், புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகாரசபை என்பன பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் -சோபித்த தேரர்-
2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்று கோட்டே ஸ்ரீ நாகவிகாரை வண. மதுலுவெள சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
2017 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்படல் வேண்டும் என்று கோட்டே ஸ்ரீ நாகவிகாரை வண. மதுலுவெள சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்படா விட்டால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியொன்று உருவாக்கப்பட்டு அடுத்த ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படுவார் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
18 ஆவது திருத்தம் நீக்கப்படல் வேண்டுமெனலும் 17 ஆவது திருத்தம் முழுமையாக அமுல்படுத்தப்படல் வேண்டும். தகவல் பெறும் உரிமை சட்டமூலம் கொண்டு வரப்பட வேண்டும்.
நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுள்ள இந்த அரசாங்கம் தற்போதைய ஜனாதிபதி முறையை நீக்க வேண்டிய கடப்பாடு உடையது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment