தீக்குளித்து உயிரிழந்த போவத்த இந்திரட்ன தேரரின் பூதவுடலை கொழும்பில் இருந்து அவரின் ஊருக்கு எடுத்து செல்லுமாறு அரசு பணித்ததாக தெரிவிக்கப படுகிறது. உடல் இரத்தினபுரிக்கு எடுத்துச் செல்வதற்கு சிஹல ராவய உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது . சடத்தை இரத்தினபுரி, கஹவத்த பிரதேசத்திற்கு எடுத்துச் செல்வது தொடர்பில் தேரர் குழுக்களுக்கிடையே மாறுபட்ட கருத்துக்களுடன் தோன்றியதால் மோதலும் ஏற்பட்டுள்ளது.இதை தொடர்ந்து பொலிசாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்ட நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி கவனம்செலுத்துவார் என்று ஆர்ப்பாட்ட காரர்களுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் அதை தொடர்ந்து அவர்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது. அதேவேளை நீதிமன்ற உத்தரவை அடுத்து குறித்த உடல் எடுத்து செல்லப் பட்டதாகவும் தெரிவிக்கப் படுகிறது
சிங்கள ராவய கொழும்பு பொறளை பகுதியில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டமானது ஊர்வலமாக பௌத்தாளோக்க மாவத்தையூடாக பம்பலப்பிட்டி வரை சென்று காலி வீதியூடாக ஜனாதிபதி மாளிகையை செல்ல முற்பட்டபோது பொலிஸார் ஆர்பாட்டத்தை இடைமறித்துள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சிங்கள ராவய அமைப்பினர் கொள்ளுப்பிட்டியில் உள்ள இறைச்சிக்கடையை தாக்கி சேதப்படுபடுத்தியுள்ளனர் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டில்
பௌத்த மதத்திற்கு அடிப்படைவாதிகளினால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள இந்தவேளையில், அரசாங்கம் பாராளுமன்றத்தில் அவசரமாக மதமாற்றம், இறைச்சிக்காக மாடு வெட்டல் மற்றும் அடிப்படைவாதத்திற்கு எதிரான பிரேரணையை கொண்டுவர வேண்டுமென பொதுபல சேனா, மற்றும் சிங்கள ராவய அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.
பௌத்தர்களின் உரிமையை பாதுகாக்க முடியாத அரசின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அதிகாரம் எதற்காக? பலாக்காய் கொத்தவா? எனவும் அவ் அமைப்புகள் கேள்வியெழுப்பியுள்ளன.
சம்புத்தத்வ ஜயந்தி மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பௌத்த அமைப்புக்களின் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப் பட்டுள்ளது.
மிருகவதை மற்றும் அடிப்படைவாதத்தால் பௌத்த மதத்திற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உட்பட பல்லேறு கோரிக்கைகளை அமுல்படுத்துமாறு தனது உயிரை போவத்தே இந்திர ரத்தின தேரர் மாய்த்துக் கொண்டுள்ளார். அவர் பௌத்த மதத்தின் மீதுள்ள பற்றுக் காரணமாகவே உயிரைத் தியாகமாக்கினார். இந்நிலையில் தீயசக்திகள் திரிபுபடுத்தி பல காரணங்களைக் கூறுகின்றன. பௌத்தர்களின் தீர்க்கப்படாத நீண்ட நாள் பிரச்சினை தான் அவர் உயிரைமாய்த்ததற்கு முக்கிய காரணம். இது இலங்கை வரலாற்றில் இடம்பெற்ற முதல் சம்பவம் ஆகும்.
நாட்டில் அடிப்படைவாத தலையீட்டால் பௌத்த தர்மத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம் அடிப்படை வாதசெயற்பாடுகளால் பௌத்த தர்மத்திற்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. இதனை நாம் அடிக்கடி குறிப்பிட்டுள்ளோம். இதில் அனைவரும் அவதானமாக செயற்பட வேண்டும். இதில் அரசியல் தலைவர்கள் அக்கறை காட்டுவதாகத் தெரியவில்லை.
இந்நிலையில் இது குறித்து பாராளுமன்றத்தில் அமைச்சரவை மட்டத்தில் விவாதங்களை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதைவிட மதமாற்றத்திற்கு எதிராக பாராளுமன்றத்தில் பிரேரணையை கொண்டு வர வேண்டும். எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தேரரில் கடிதத்தில்
உலகப் புனிதராம் போதி மாதவனின் பாதம் பட்ட இலங்கைப் பூமியில் ‘‘மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும்’’ ஏனென்றால் இது சிங்கள பௌத்தர்களின் புனித பூமியென கண்டி தலதா மாளிகை முன்பதாக தீக்குளித்து உயிரிழந்த போவத்தே இந்திர ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
போவத்தை இந்திரரத்ன தேரர் கடந்த 7 ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகவியலாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. இதன்போது உயிர்த் தியாகம் செய்த இந்திர ரத்ன தேரர் ஜனாதிபதிக்கு தனது கையெழுத்தில் எழுதிய கடிதம் என ஊடகவியலாளர்களிடம் ஹெல உறுமய கையளித்த கடிதப் பிரதிகளிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
அக் கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது, சமாதானத்தின் ஒளிக்கீற்றுக்கள் மனிதனுக்கு மட்டுமல்ல, மிருகங்களுக்கும் கிடைக்க வேண்டும். ஒரு நாளைக்கு இலங்கையில் 5000 மாடுகளின் ரத்தத்தால் இப்பூமி நனைகின்றது என்பதை நீங்கள் அறிவீர்களா? இது தொடர்பாக நான் உங்களுடனும் பேச்சுவார்த்தைகளை நடத்தினேன்.
அதன் பின்னர் பத்து இலட்சம் கையெழுத்துகளுடனான மகஜர் ஒன்றையும் கையளித்தேன். அத்தோடு எம்பிலிபிட்டியவிலிருந்து அனுராதபுரம் வரை பாதயாத்திரையாக வந்து ஜயஸ்ரீ மகா போதியில் ஆசீர்வாதப் பூஜை நடத்தினேன்.
ஆனால் எனது எந்தவொரு முயற்சிக்கும் பதில் கிடைக்கவில்லை. எனவே எனது உயிரைத் தியாகம் செய்யத் தீர்மானித்தேன்.
கீழ்க்கண்ட உங்களின் கவனத்திற்கு முன் வைக்கின்றேன்.
மாடு வெட்டுவது தடை செய்யப்பட வேண்டும். பலாத்காரமாக மதம் மாற்றுவதற்கு எதிரான பிரேரணை பாரளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும், முஸ்லிம் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும், பௌத்த நாட்டுக்கு ஏற்ற அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். பௌத்தத்தை ஒழிக்கும் சர்வமத அமைப்புகள் ஒழிய வேண்டும். பௌத்தம் பாதுகாக்கப்பட வேண்டும். இதுவே தலதா மாளிகையின் முன்னால் நான் முன் வைக்கும் பிரார்த்தனையாகும் என்றும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
கண்டி நகரில் ஆர்ப்பாட்டம்
தற்கொலை செய்துக்கொண்ட பௌத்த தேரரில் இறுதிக்கிரியைகளை நாளைய தினம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன நீதிமன்ற உத்தரவின்பேரில் இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகிறது .
அதேவேளை பௌத்த தர்மத்திற்காக தீக்குளித்து உயிர்துறந்த போவத்தகே ,இந்திர ரத்ன தேரரின் கோரிக்கைகளை அரசாங்கம் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி கண்டியில் சில பௌத்த அமைப்புகள் ,இன்று மாலை ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது .
கண்டி நகரில் நடைபெற்ற ,இந்த ஆர்ப்பாட்டத்தில், கண்டி பௌத்த ஒன்றிய அமைப்பு, பொது பலசேனா உட்பட சில பௌத்த அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டுள்ளனர் .
Post a Comment