குறுகிய கால நினைவிழப்பால் பாதிக்கப்பட்ட தம்பதிக்கு பிறந்த சாதாரண குழந்தை-
பிரிட்டனில் உள்ள சௌத்வேல்ஸ் என்ற பகுதியில் short term memory loss (குறுகிய கால நினைவிழப்பு) என்ற நோயால் பாதிக்கப்பட்ட ஒரு தம்பதிக்கு பிறந்த குழந்தை எவ்வித மூளை பாதிப்பும் இன்றி பிறந்துள்ளமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

லூசிஸ் மற்றும் ஜெனஸ் என்ற தம்பதிகள் இருவருமே short term memory loss (குறுகிய கால நினைவிழப்பு) என்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள். இவர்களுடைய ஞாபகசக்தி அதிகபட்சமாக 24 மணி நேரங்கள் மட்டுமே இருக்கும். இவர்கள் தங்களுடைய செயல்கள் ஒவ்வொன்றையும் எழுதி வைத்து ஞாபகப்படுத்தி செய்வார்கள்.
இந்நிலையில் இவர்களுக்கு சென்ற வாரம் குழந்தை பிறந்தது. அதிர்ஷ்டவசமாக இவர்களுடைய குழந்தையின் மூளையில் எவ்வித பாதிப்பின்றி சாதாரணமாக இருப்பதால் மருத்துவர்கள் தெரிவித்துள்னர். அதனால் இந்த தம்பதிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.
தீவிர பயிற்சி எடுப்பதன் காரணமாக இவர்களுடைய ஞாபகசக்தியும் அதிகரித்து வருவதாக இவர்களுக்கு சிகிச்சை செய்யும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த தம்பதியினர் 90 தொலைபேசி இலக்கங்களை ஞாபகமாக வைத்துக் கொள்ளும் திறன் உள்ளவர்களாக மாறியுள்ளனர்.
ஈரான் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை-
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட அந்நாட்டு முன்னாள் அதிபருக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது.
ஈரான் அதிபர் தேர்தல் வரும் ஜுன் மாதம் 14-ம் தேதி நடக்கிறது. இதில் கன்சர்வேடிவ், சீர்திருத்த கட்சிகள் சார்பில் மொத்தம் ஐந்து வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் முன்னாள்அதிபர் அக்பர் ஹஸ்மி ரப்சன்ஜானி போட்டியிட தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. இதற்கான காரணம் வெளியிடபடவில்லை என அந்நாட்டு உள்துறை அமைச்சர் கூறினார்.
தற்போதைய அதிபர் முகமது அகமது நிஜாத்தும் அதிபர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறார்.
Post a Comment