மியான்மரில் புத்த குருவை கொன்ற 6 முஸ்லிம்களுக்கு சிறைத் தண்டனை-
மியான்மரில் இந்துக்களுடன் முஸ்லிம் மக்களும் பெருவாரியாக வாழ்ந்து வருகின்றனர். கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதியன்று, முஸ்லிம் ஒருவருக்கு சொந்தமான தங்க நகைக் கடை ஒன்றில், விற்பனைக்கு வந்திருந்த புத்த சமயத்தினருக்கும், கடை உரிமையாளருக்கும் ஏற்பட்ட வாய்த் தகராறு மதக் கலவரமாக மற்ற இடங்களில் பரவியது.

பல நாட்கள் தொடர்ந்த இக்கலவரங்களில் 43 பேர் கொல்லப்பட்டனர். முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையினர் உட்பட 12000 பேர் இடமாற்றம் செய்ய நேரிட்டது. இக் கலவரம் பின்னர், மியான்மரின் மத்தியப் பகுதிக்கும் பரவியது.
இந்தக் கலவரத்தின் போது, புத்த மதகுரு ஒருவரைக் கொன்றதாக தற்போது 6 முஸ்லிம் இனத்தவருக்கும், ஒரு சிறு வயதினருக்கும் ஆயுள் தண்டனையில் இருந்து இரண்டு வருட சிறைத் தண்டனை வரை வழங்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்காக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனையும், பிற மதத்தினை அவமதித்ததிற்காக இரண்டு ஆண்டுகளும் என ஆயுள் தண்டனை உட்பட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று குற்றவாளிகளுக்காக வாதாடிய வழக்கறிஞர் தேன் தான் ஓ தெரிவித்துள்ளார்.
Post a Comment