துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை! / ஈரான் உளவுத்துறைக்காக உளவு பார்த்த 10 உளவாளிகள் சவுதி அரேபியாவில் கைது!




துபாயில் பணிபுரிபவர்கள் குடும்பத்தை அங்கு அழைத்துக் கொள்ள புதிய நடைமுறை!
துபாயில் தங்கியிருந்து பணிபுரிபவர்கள் தமது குடும்பத்தை துபாய்க்கு அழைத்துக் கொள்ள விண்ணப்பிக்கும்போது, இனி வங்கி கணக்கு ஸ்டேட்மென்ட்டுகள் தேவை என்ற நடைமுறை வரவுள்ளது.
இதுவரை காலமும், பணிபுரியும் நிறுவனத்தில் இருந்து கடிதம் (salary certificate) கொடுத்தால் போதும் என்று இருந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுகிறது.
துபாயில் உள்ள GDRFA (General Directorate of Residency and Foreigners Affairs) அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “ஏற்கனவே துபாயில் பணிபுரிந்து கொண்டிருப்பவாக இருந்தால், 3 மாதங்களுக்கான பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை. அதில் அவரது சம்பளம் பதிவாகி இருக்க வேண்டும். துபாய்க்கு புதியவராக இருந்தால், குடும்பத்தை ஸ்பான்சர் செய்ய 1 மாத பேங்க் ஸ்டேட்மென்ட் தேவை” என்றார்.
Dh10,000 ஊதியம் பெறுவதாக பணியிடத்தில் இருந்து கடிதம் வாங்கிவந்த சிலர், Dh2,500 ஊதியத்திலேயே பணிபுரிவதை நாம் அறிந்திருக்கிறோம். இதனால், இந்த புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது” என்றும் தெரிவித்தார் அவர்.
இதுவரை காலமும், குடும்பத்தை ஸ்பான்சர் பண்ண விரும்பும் ஒருவர், labour contract, salary certificate ஆகியவற்றுடன் விண்ணப்பித்தால் போதுமானது. இனி புதிதாக விண்ணப்பிப்பவர்கள், இந்த இரு ஆவணங்களுடன், பேங்க் ஸ்டேட்மென்டையும் கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
இதில் ஒரு நல்ல விஷயம், இந்த நடைமுறை புதிதாக விண்ணப்பிக்கும் ஆட்களுக்கு மட்டுமே. ஏற்கனவே குடும்பத்தை அழைத்துக் கொண்டவர்கள் விசாவை நீடிப்பு (renewing residency visas) செய்யும்போது இந்த நடிவடிக்கை கிடையாது.
அதாவது, பேங்க் ஸ்டேட்மென்ட் தேவையில்லை.
ஈரான் உளவுத்துறைக்காக உளவு பார்த்த 10 உளவாளிகள் சவுதி அரேபியாவில் கைது!
தமது நாட்டுக்குள் உளவு வேலைகளில் ஈடுபட்ட உளவாளிகள் என்று 10 பேரை கைது செய்துள்ளது சவுதி அரேபியா. இவர்கள் ஈரானிய உளவுத்துறையின் உளவாளிகள் என்பது சவுதியின் குற்றச்சாட்டு.
கைது செய்யப்பட்ட 10 பேரில், 8 பேர் சவுதி ஆரேபிய பிரஜைகள், ஒருவர் லெபனானை சேர்ந்தவர், மற்றொருவர் துருக்கிக்காரர். இவர்கள், ஈரானிய உளவுத்துறையினரிடம் இருந்து பணம் பெற்றுக் கொண்டு, சவுதிக்குள் உளவு வேலைகள் பார்த்து தகவல் அனுப்பினார்கள் என்று தெரிவித்துள்ளார், சவுதியின் உட்துறை அமைச்சர் ஜெனரல் மன்சூர் அல் துர்கி.
கடந்த மார்ச் 19-ம் தேதி, 18 பேர் அடங்கிய குழு ஒன்றை உளவு வேலைகள் பார்த்த குற்றச்சாட்டில் சவுதி பாதுகாப்பு படையினர் கைது செய்திருந்தனர். அவர்கள், சவுதிக்குள் ஒரு உளவு நெட்வெர்க் அமைத்து பல தகவல்களை பெற்று வெளியே அனுப்பிக் கொண்டிருந்தனர் என்று அப்போது கூறப்பட்டது.
அவர்களின் நெட்வெர்க் தொடர்பாக புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அடுத்தே, தற்போது கைது செய்யப்பட்ட 10 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பாக மேலதிக தகவல் எதையும் சவுதி உட்துறை வெளியிடவில்லை. இவர்கள் என்ன விதமான தகவல்களை வெளியே அனுப்பினார்கள் என்ற விபரமும் தெரியவில்லை.
அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ. தமது மிடில்-ஈஸ்ட் நெட்வெர்க்கின் ஆபரேஷனின் குறிப்பிட்ட சில பிரிவுகளை சவுதி அரேபியாவில் வைத்தே இயக்குகிறது என்பது, மேலதிக தகவல்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger