துபாய் துறைமுகத்தில் 259 யானை தந்தங்கள் பறிமுதல்-
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
கள்ளத் தனமாக கடத்தப்பட்ட 259 யானை தந்தங்களை துபாய் துறைமுக சுங்கத் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
ஆப்பிரிக்க நாட்டில் இருந்து ‘மரச் சாமான்கள்’ என குறிப்பிடப்பட்ட கண்டெய்னர் ஒன்று துபாயில் உள்ள ஜெபெல் அலி துறைமுகத்திற்கு கப்பலில் வந்தது.
அந்த கண்டெய்னரில் இருந்த பெட்டிகளை சுங்கத் துறையினர் சந்தேகத்தின் பேரில் சோதனை செய்தனர். பெட்டிகளின் உள்ளே ஆப்பிரிக்க நாட்டின் அரியவகை யானை தந்தங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
மொத்தம் 259 தந்தங்களை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள், இவற்றை அனுப்பிவைத்த ஆப்பிரிக்க ஏஜென்டை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
1990-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சர்வதேச யானை தந்தம் கடத்தல் (தடுப்பு) ஒப்பந்தத்தில் துபாய் அரசு கையொப்பமிட்டுள்ளது. துபாயின் உள்நாட்டு சட்டவிதி 11-ன் கீழ் யானை தந்தம் கடத்தல் மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சிரியா அதிபருக்கு இஸ்ரேல் தளபதி எச்சரிக்கை-
இஸ்ரேல் – சிரியா எல்லையோரம் இஸ்ரேலின் ராணுவ ஜீப்பை சிரியா நேற்று குண்டு வீசி தாக்கியது. இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது.
இஸ்ரேல் – சிரியா எல்லையோரம் இஸ்ரேலின் ராணுவ ஜீப்பை சிரியா நேற்று குண்டு வீசி தாக்கியது. இஸ்ரேலின் ஆதிக்கத்திற்குட்பட்ட கோலன் ஹய்ட்ஸ் பகுதியில் இஸ்ரேல் ராணுவ ஜீப் நேற்று ரோந்துப் பணியில் ஈடுபட்டது.
அந்த ஜீப்பின் மீது குண்டுகளை வீசி சிரியா ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தினர். எங்களது எல்லைக்குள் இஸ்ரேல் ஜீப் நுழைந்ததால் நாங்கள் தாக்கினோம் என்று சிரியா விளக்கம் அளித்தது.
இந்நிலையில், ஊடகங்களுக்கு பேட்டியளித்த இஸ்ரேல் ராணுவ தளபதி லெப்ட்டினென்ட் ஜெனரல் பென்னி கேண்ட்ஸ், ‘எங்கள் ஆதிக்கத்திற்கு உட்பட்ட பகுதியில் ராணுவத்தின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சிரியா அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்து நீடித்தால் சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என எச்சரித்துள்ளார்.
Post a Comment