பத்தனையில் தந்தையால் கொடுமைப் படுத்தப்பட்ட பிள்ளைகள் / குழந்தைக்கு வழங்கிய மருந்தில் கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிப்பு / 18 சதவீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை -பெப்ரல்


 

503944071childபத்தனையில் தந்தையால் கொடுமைப் படுத்தப்பட்ட பிள்ளைகள்-
நுவரெலியா, பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லொக்கில் பகுதியில் தந்தையால் துன்புறுத்தப்பட்ட நான்கு பிள்ளைகள் பத்தனை பொலிஸாரல் மீட்கப்பட்டுள்ளனர்.
பிரதேச மக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய குறித்த வீட்டிற்கு பத்தனை பொலிஸார் சென்ற பொழுது இந்த நான்கு பிள்ளைகளும் பட்டினியுடன் இருந்துள்ளனர். இவர்கள் 6 வயது தொடக்கம் 13 வயது வரையுடைய மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு ஆண் பிள்ளையும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களிடம் விசாரணை செய்த பொழுது தாய் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தந்தை வேலைக்கு செல்லாமல் தாய் அனுப்பும் பணத்தில் குடித்து விட்டு வந்து தம்மை அடித்து துன்புறுத்துவதாகவும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தமக்கு சரியான உணவு கிடைப்பதில்லை எனவும் சில சந்தர்ப்பங்களில் அயலவர்கள் கொடுக்கும் உணவை தாம் உட்கொண்டதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட தந்தையையும் தாம் கைது செய்துள்ளதுடன் பிள்ளைகளையும் தந்தையையும் அட்டன் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குழந்தைக்கு வழங்கிய மருந்தில் கண்ணாடித் துண்டுகள் கண்டுபிடிப்பு-
மருந்தகமொன்றில் கொள்வனவு செய்யப்பட்ட மருந்துக் குப்பியினுள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டதாக ஒருவர் தெரிவித்துள்ளார். குறித்த மருந்தை தமது குழந்தைக்கு வழங்கிய சந்தர்ப்பத்தில் மருந்தில் கண்ணாடித் துண்டுகள் இருப்பதை அவதானித்ததாகவும் அதன் பின்னர் தனது குழந்தையை எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கண்ணாடித் துண்டுகள் கண்டெடுக்கப்படுவதற்கு முன்னர் அதே மருந்துக் குப்பியிலிருந்து இரண்டு தடவைகள் குழந்தைக்கு மருந்து வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, குழந்தையின் தந்தை கொண்டுவந்த மருந்துக் குப்பியில் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டதை அவதானிக்கக்கூடியதாக இருந்ததென எம்பிலிப்பிட்டி வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் அனோஜ் ரேதிகோ தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், கண்ணாடித் துண்டுகள் குழந்தையின் உடலில் இருக்கின்றதா என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
18 சதவீதமானோருக்கு அடையாள அட்டை இல்லை -பெப்ரல்-
வடக்கு மாகாண வாக்களர்களில் நூற்றுக்கு 18 சதவீதமானோர் இன்னும் தேசிய அடையாள அட்டை இல்லாமல் இருப்பதாக பெப்ரல் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இதனை எமது செய்தி சேவைக்கு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எதிர்வரும் செப்டம்பர் மாதம் இடம்பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை கருத்தில் கொண்டு தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொண்டுக்கும் நடவடிக்கைகளை தமது அமைப்பு ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
503944071child
 

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger