இந்திய காதலனை அடித்து கொன்ற இலங்கை பெண்ணுக்கு சிங்கப்பூரில் 10 ஆண்டு சிறை!-
இந்தியரான தனது காதலனை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த திருமணமான வீட்டு பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
இந்தியரான தனது காதலனை கொலை செய்ததாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த திருமணமான வீட்டு பணிப்பெண்ணுக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் 10 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
2009 ஆண்டு அவர்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையின் போதே தனது காதலனை பணிப்பெண் கொலை செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த வழக்கு விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் இன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டபோதே அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த இலங்கை இந்திய ஜோடி தமது காதல் விவகாரத்தை 2007-ம் ஆண்டில் தொடங்கியுள்ளனர் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோர்ட் ஆவணங்களில் இருந்து, இந்திய பிரஜையான முருகையன் செல்வம், 1998-ம் ஆண்டு முதல் சிங்கபூரில் பணிபுரிந்து வந்தார். இலங்கையைச் சேர்ந்த புவனேஸ்வரி தர்மலிங்கம் 2004-ம் ஆண்டு சிங்கபூருக்கு சென்றுள்ளார்.
இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்ததுடன், 2009-ம் ஆண்டு சண்டை ஏற்பட்டள்ளது. அதையடுத்து, 34 வயதான புவனேஸ்வரி 32 வயதாக முருகையன் செல்வத்தின் தலையில் சுமார் 6.5 கிலோ எடை கொண்ட எக்சர்சைஸ் கருவியால் அடித்துள்ளார்.
முருகையன் செல்வம் இறந்துவிட்டார். முருகையன் மீது தான் தாக்குதல் நடத்தியதை புவனேஸ்வரி ஒப்புக் கொண்டுள்ளார்.
சரி. இவர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது ஏன்?..
முருகையன் செல்வத்துக்கு இந்தியாவில் திருமணம் நிச்சயமாகி இருந்தது. அதற்காக இந்தியா செல்வதற்கு பணம் எடுப்பதற்காக புவனேஸ்வரி பணிப்பெண்ணாக பணிபுரியும் வீட்டு உரிமையாளரின் செக் புக்கை எடுத்து தருமாறு கேட்டுள்ளார். அந்த செக்கில் போலி கையெழுத்திட்டு பணம் எடுப்பதே அவரது திட்டம்!
அதனை எடுத்து கொடுப்பதற்கு புவனேஸ்வரி மறுத்ததை அடுத்தே இருவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டு, பின்னர் அது கொலையில் முடிந்துள்ளது.
புவனேஸ்வரிக்கு இலங்கையில் கணவனும், இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பாலியல் உணர்வுகளை தூண்டும் விளம்பரங்களுக்கு தடை-
பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துவகைகள், வில்லைகள் தொடர்பான பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைத் தடைசெய்யும் வகையில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்துவகைகள், வில்லைகள் தொடர்பான பத்திரிகை, தொலைக்காட்சி விளம்பரங்களைத் தடைசெய்யும் வகையில் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படுமென சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
பாலியல் உணர்வுகளைத் தூண்டும் மருந்து வகைகளில் 90 சதவீதம் மதுசாரம் கலக்கப்படுவதாகவும் அதனால் இதைப் பாவிப்பவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுவதாகவும் அமைச்சு தெரிவிக்கின்றது.
Post a Comment