கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் வந்த கடிதத்தில் மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரகங்களின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
´அல் ஜிஹாத்´ என பெயரிடப்பட்டுள்ள லெட்டர் பேர்டில் எழுதப்பட்டுள்ள அந்த கடிதத்தின் நகலை கொல்கத்தாவில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகள் மும்பை அமெரிக்க தூதரகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனையடுத்து, மும்பை பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அல் ஜிஹாத் என்ற பெயரில் எந்த தீவிரவாத அமைப்பும் இல்லாததால் ஏற்கனவே இயங்கி வரும் தீவிரவாத குழுக்கள் இந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என மும்பை பொலிசார் கருதுகின்றனர்.
´மும்பை, ஐதராபாத், பெங்களூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள அமெரிக்க தூதரக கட்டிடங்களை உடனடியாக காலி செய்து வெளியேற வேண்டும். இல்லாவிட்டால், அமெரிக்க தூதரங்களின் மீது வெடிகுண்டுகளை வீசி தாக்குவோம்.
வரும் ஜூலை மாதத்திற்குள் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் தாக்குதல்களை நடத்துவோம்´ என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment