கள்ள நோட்டு அச்சிட்ட 16 வயது மாணவன் கைது / கொலன்னாவையில் மூலிகைத் தாவரத்துடன் அறுவர் கைது / குளவி தாக்கி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி


2000 ரூபா கள்ள நோட்டை அச்சிட்ட 16 வயது பாடசாலை மாணவனொருவனையும் மற்றுமொரு நபரையும் கொஸ்கொட பொலிஸார் கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.
கள்ள நோட்டு அச்சிட்டதாக கூறப்படும் இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த நோட்டு அச்சிடும் உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.
கொஸ்கொட பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றை அடுத்து இந்துருவ, குருகந்த பிரதேசத்தில் சந்தேக நபர்களுடன் ஆட்டோவொன்றையும் கைப்பற்றியுள்ளனர்.
பலப்பிட்டிய டில்ஷான் டி. சில்வா என்ற 16 வயது சந்தேகநபர் அம்பலன் தொட்டயிலுள்ள பிரசித்த பாடசாலையொன்றில் கல்வி பயில்பவராவார். மற்ற நபர் சுரேஷ் மதுஷான் (23 வயது) கரந்தெனியவைச் சேர்ந்தவராவார். பொலிஸார் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளனர்.
கொலன்னாவையில் 20 கோடி ரூபா பெறுமதியான மூலிகைத் தாவரத்துடன் அறுவர் கைது-
கொழும்பு, கொலன்னாவ பிரதேசத்தில் 20 கோடி ரூபா பெறுமதியான வல்லபட்டை என்ற மூலிகைத் தாவரத்துடன் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலையடுத்தே நேற்றிரவு இவர்கள் செய்யப்பட்டனர். பின்னர் இவர்கள் வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையத்த்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.
இவர்களிடமிருந்து 15 ஆயிரம் கிலோ கிராம் மூலிகைத் தாவரம் கைப்பற்றப்பட்டுள்ளது. இவர்கள் இந்த மூலிகைகளை இந்தியாவுக்குக் கொண்டு செல்வதற்குத் திட்டமிட்டிருந்தமை ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வாசனைத் திரவியங்களைத் தயாரிப்பதற்கு இந்த மூலிகைத் தாவரம் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குளவி தாக்கி 7 பேர் வைத்தியசாலையில் அனுமதி-
பதுளை – தியத்தலாவ – கீழ் கதுருகமுவ பகுதியில் 7 பேர் குளவி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த சிலரும் வீதியில் சென்ற சிலருமே குளவி தாக்குதலுக்கு உள்ளாகினர். இவர்கள் தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. இலங்கை முஸ்லிம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger