இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் பணியாற்றும் பணியாளர்கள் பெண்களை அழைத்து விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதாக பொது மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இலங்கை செஞ்சிலுவைச் சங்க முல்லைத்தீவுக் கிளையில் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் திட்டம் ஒன்றில் பணியாற்றுகின்ற ஹட்டன் கொட்டகலையைச் சேர்ந்த முரளி என்று அழைக்கப்படும் 41 வயதுடைய முத்துக் கறுப்பன் பழனியப்பன் என்றவர் தலைமையில் தங்கியிருப்பவர்களே இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் முள்ளியவளையில் வாடகைக்கு வீடு ஒன்றை பெற்றுத் தங்கியுள்ளனர். திருமணம் செய்வதாகக் கூறி வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கப் பெண் பணியாளர்கள் அழைத்து வந்து இவ்வாறான விபச்சார நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
பொது விடுமுறை நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் இரவு நேரங்களில் திருமணம் செய்வதாகக் கூறி பெண்களை அழைத்து வந்து மது அருந்தி மிகவும் சத்தமாக பாடல்களை இசைக்க செய்து நடனமாடுகின்றனர்.பின்னர் அவர்களை விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுத்துகின்றதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
மிகவும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களை ஆசை வார்த்தை காட்டி இவர்கள் மோசடி செய்வது தொடர்பில் பலமுறை பொது மக்களால் முல்லைத்தீவுக் கிளைக்கு எடுத்துக் காட்டியபோதும் எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.
இக்குழுவிற்கு தலைமை தாங்கும் ஹட்டனைச் சேர்ந்த நபர் அங்கு ஏற்கனவே திருமணம் செய்து கொண்டுள்ளார். அங்கு இவருக்கு 18 வயதிற்கும் கூடிய பிள்ளைகளின் உள்ளனர்.
இதனைத் தொடர்ந்து மட்டக்களப்பிலும் திருமணம் செய்து அங்கும் இவருக்கு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் முல்லைத்தீவிலும் திருமணம் செய்யும் முயற்சிகளில் இவர் ஈடுபட்டு வருகின்றார்.
இவரது நடவடிக்கைகளுடன் தொடர்புடைய தனுஷ் என்ற ஏறாவூரைச் சேர்ந்த முஸ்லிம் பணியாளர் ஒருவர் அண்மைக்காலமாக தலைமறைவாகிவிட்டார்.
இந்நிலையில் இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட பெண்களைப் பாதுகாகப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment